Last Updated:
தீனதயாள் என்பவருடன், கடந்த 5 ஆண்டுகளாக கோபாலி தேவி முறை தவறிய உறவில் இருந்து வந்துள்ளார்.
ராஜஸ்தானில் மனைவியே தனது கணவரை அடித்துக் கொன்று சாலையோரம் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சுற்றுவட்ட சாலை பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்தது காய்கறி வியாபாரியான தனலால் சைனி என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது மனைவி கோபாலி தேவியை பிடித்த போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
தீனதயாள் என்பவருடன், கடந்த 5 ஆண்டுகளாக கோபாலி தேவி முறை தவறிய உறவில் இருந்து வந்துள்ளார். இதை அறிந்த சைனி, தனது மனைவியை கண்டித்துள்ளார். இருந்த போதும் அதை பொருட்படுத்தாத கோபாலி தேவி, தனது ரகசிய காதலனை சந்திப்பதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் கடையில் ஒன்றாக இருப்பதை பார்த்ததும் தனலால் சைனி, கடும் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கோபாலி தேவி மற்றும் தீனதயாள், ஒன்று சேர்ந்து, சைனியின் தலையில் இரும்பு ராடால் பலமாக தாக்கியுள்ளனர். இதனால், அவர் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், மயக்க நிலையில் இருந்தவரை கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
இதையும் படிக்க: 3 ஆண்டுகளில் 32 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்.. எத்தனை கோடி ரூபாய் செலவு தெரியுமா? – வெளியான தகவல்
இதை தொடர்ந்து, கோபாலி தேவி, தீனதயாள் இருவரும் சேர்ந்து சைனியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று சாலையில் வீசியுள்ளனர். இது சிசிடிவி காட்சி மூலம் அம்பலமானது. ஊருக்கு ஒதுக்குப்புறம் சுற்றுவட்ட சாலை பகுதி அருகே சைனியின் உடலை எரித்ததாக கோபாலி தேவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, கோபாலி தேவி மற்றும் தீனதயாளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவியே தனது ரகசிய காதலனுடன் சேர்ந்து, கணவரை அடித்துக் கொன்று சாலையோரம் எரித்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
March 21, 2025 1:58 PM IST

