சென்னையில் உள்ள ஒரு சாலைக்கு இந்திய வீரர் அஸ்வின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர் என்று அழைக்கப்படும் இந்திய சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
பார்டர் – காவஸ்கர் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியுடன் சென்ற அஸ்வின், 3-வது போட்டி முடிவில் திடீரென்று ஓய்வை அறிவித்து நாடு திரும்பினார். 106 டெஸ்ட்டில் 537 விக்கெட்டுகள், இதில், 37 முறை 5 விக்கெட்டுகள், 8 முறை 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாக ஜெய்ஸ்வால் செய்ய வேண்டியதென்ன?
