Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

’அரிய வகை மூலிகை; தலையில் தடவினா கருகருனு வளரும்..’ – முடிக்கு ஆசைப்பட்டு கண்பார்வைக்கு ஆபத்து!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 20, 2025
in அரசியல் செய்திகள்
0
’அரிய வகை மூலிகை; தலையில் தடவினா கருகருனு வளரும்..’ – முடிக்கு ஆசைப்பட்டு கண்பார்வைக்கு ஆபத்து!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 20, 2025 10:28 PM IST

சங்ரூரில் காளி மாதா கோவிலில் வழுக்கைத் தலைக்கு சிகிச்சை முகாமில் 200 பேர் பங்கேற்றனர். மருந்தால் 60 பேர் கண் பார்வை பாதிக்கப்பட்டனர். முகாமை நடத்தியவர்களுக்கு வழக்கு பதிவு.

News18News18
News18

பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் உள்ள காளி மாதா கோவிலில் வழுக்கைத் தலைக்கு சிகிச்சை அளிக்க ஒரு இலவச முகாம் நடத்தப்பட்டது. இன்ஸ்டாவில் பரவிய விளம்பரத்தை பார்த்து கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்டோர் அந்த முகாமில் பங்கேற்றனர்.

அரிய வகை மூலிகைகளால் காய்ச்சி எடுத்த பிரத்தியேக மருந்தை வழுக்கையில் தடவினால் விரைவில் முடி முளைக்க ஆரம்பித்து விடும் என விளம்பரப்படுத்தி உள்ளனர். அதை உண்மை என நம்பி தலையை கொடுத்தவர்களுக்கு முகாமை ஏற்பாடு செய்தவர்கள் மருந்தை தடவ ஆரம்பித்தனர்.

அடுத்த 10 நிமிடத்தில் எல்லாம் தலைகீழானது. மருந்து தடவியவர்களின் கண்களில் வீக்கம் ஏற்பட்டு நீர் வடிய ஆரம்பித்தது. மேலும் கண்ணில் பயங்கர எரிச்சலும் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நிமிடங்களில் பொறுக்க முடியாத அளவுக்கு வலிக்க தொடங்கியதால் மருந்து தடவிய பலரும் பெரும் அச்சத்திற்கு ஆளாகினர்.

இதையும் படியுங்கள் : கால்வாயில் மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட பட்டதாரி பெண்ணின் உடல்.. கார் டிரைவரின் குரூர செயல்

அதன் பின்னர், சங்ரூரில் உள்ள பொது மருத்துவமனையில் கண் தொற்றுடன் ஏராளமான நோயாளிகள் குவிந்தனர். தனியார் மருத்துவமனைகளிலும் கூட்டம் கூடினர். அவர்கள் கண் தொற்றால் பாதிக்கப்பட்டதுடன் கடும் வலியாலும் அவதிப்பட்டுள்ளனர்.

வழுக்கையில் மருந்து தடவி கொண்டவர்களில் 60-க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரில் சங்ரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முகாமை நடத்திய அமன்தீப் சிங் மற்றும் தஜிந்தர் பால் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முறையாக அனுமதி பெறாமலும், சட்ட விரோதமாகவும் இச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. வழுக்கையில் தடவிய மருந்தில் என்னென்ன பொருட்கள் கலந்தார்கள்? அதனால் மேலும் என்ன பக்க விளைவுகள் ஏற்படும் என மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

First Published :

March 20, 2025 10:26 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

’அரிய வகை மூலிகை; தலையில் தடவினா கருகருனு வளரும்..’ – முடிக்கு ஆசைப்பட்டு கண்பார்வை இழக்கும் அபாயம்



.

Previous Post

அமலாக்கத்துறை பதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Next Post

தங்கம் விலை நிலவரம்: ’67 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம்!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தங்கம் விலை நிலவரம்: ’67 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம்!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தங்கம் விலை நிலவரம்: ’67 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம்!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In