Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகா கும்பமேளா; ”1000 இந்துக்களை காணவில்லை.. பாஜக பதில் சொல்ல வேண்டும்” – அகிலேஷ் யாதவ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 19, 2025
in அரசியல் செய்திகள்
0
மகா கும்பமேளா; ”1000 இந்துக்களை காணவில்லை.. பாஜக பதில் சொல்ல வேண்டும்” – அகிலேஷ் யாதவ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 19, 2025 6:17 PM IST

மகா கும்பமேளாவில் 1000 இந்துக்கள் காணாமல் போனதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

News18News18
News18

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற மக்களவைக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். மேலும், மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடி, மகா கும்பமேளா குறித்து கருத்து தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் அவர், “மகா கும்பமேளா மூலம் இந்தியாவின் பலத்தை உலகமே கண்டதாக” பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பிரயாக்ராஜின் மகா கும்பமேளா குறித்து பேசுவதற்காக நான் இங்கு இருக்கிறேன். மகா கும்பமேளாவை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி முடித்ததற்காக கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பலரும் மகா கும்பமேளா வெற்றிக்காக தங்கள் பங்களிப்பை தந்துள்ளனர். இந்திய மக்களுக்கும், உத்தரப்பிரதேசத்திற்கும் மற்றும் பிரயாக்ராஜுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் செங்கோட்டையில் பேசும்போது அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பல்வேறு சாதனைகளை புரியலாம் என்று தெரிவித்திருந்தேன். தற்போது, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் பிரம்மாண்டத்தை கண்டது. நமது பலத்தை சந்தேகத்துடன் பார்ப்பவர்களுக்கு இது தகுந்த பதிலை கொடுத்துள்ளது” என்று பேசினார்.

இதையும் படியுங்கள் : “ரயில்வே தேர்வு வாரியத்தின் அலட்சியத்தின் உச்சம்..” – ஆர்.ஆர்.பி. தேர்வு ரத்துக்கு சு. வெங்கடேசன் விமர்சனம்

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. அகிலேஷ் யாதவ், “மகா கும்பமேளா பற்றி மீண்டும் மீண்டும் நாம் நினைவுகூருகிறோம். அதேசமயம், இதில் முக்கியமான கேள்வி என்னவென்றால், மகா கும்பமேளாவை ஒருங்கிணைத்து நடத்த மத்திய அரசு எவ்வளவு நிதி வழங்கியது.

உத்தரப் பிரதேச முதல்வரும், மத்திய பிரதேச முதல்வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை மட்டுமே செய்தனர். மக்கள் எல்லைக்குள் கூட நுழைவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

1000 இந்துக்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு பாஜகவும், அதன் தொண்டர்களும் உதவ வேண்டும். காணாமல் போயுள்ள அந்த 1000 இந்துக்கள் குறித்து அவர்களின் குடும்பங்களுக்கு பாஜக முறையான பதிலை வழங்கவேண்டும். காணாமல் போன அந்த 1000 இந்துக்களையாவது பாஜக கண்டுபிடிக்க வேண்டும்” என்று பேசினார்.

#WATCH | Delhi: On Nagpur violence, Samajwadi Party chief Akhilesh Yadav says, “Wherever such riots take place, BJP wants to take advantage of it, everything happens at the behest of BJP… It is being heard that (Chhatrapati Shivaji Maharaj)’s Tilak was done with the toe…… pic.twitter.com/cLNo8uXbqR


— ANI (@ANI) March 19, 2025

தொடர்ந்து நாக்பூர் கலவரம் குறித்து பேசிய அவர், “இப்படியான கலவரங்கள் நடக்கும் இடங்களில் பாஜக அதனை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும். பாஜகவின் உத்தரவின்படி தான் அனைத்தும் நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பியின் வீடும், அரசு வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. ஷாஜஹான்பூரில் காவல்துறையினர் மீது தாக்குதலும், சிதாப்பூரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடும் நடந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

First Published :

March 19, 2025 6:17 PM IST



.

Previous Post

“பாவம் பால்வளத்துறையை கொல்லாதீங்க, விட்டுடுங்க..!” தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வேதனை!

Next Post

இந்திய ரயில்கள் மீதான 7,971 கல்வீச்சு சம்பவங்களில் 4,549 பேர் கைது: மத்திய அரசு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்திய ரயில்கள் மீதான 7,971 கல்வீச்சு சம்பவங்களில் 4,549 பேர் கைது: மத்திய அரசு!

இந்திய ரயில்கள் மீதான 7,971 கல்வீச்சு சம்பவங்களில் 4,549 பேர் கைது: மத்திய அரசு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In