சென்னையில் மார்ச் 23-ல் நடைபெறும் இரண்டாவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது.
காலை 10.15 மணி முதல் தொடங்கிய டிக்கெட் விற்பனை சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். சிலருக்கு சிஎஸ்கே இணையதளத்தில் கோளாறுகள் காட்டப்பட்டதாலும், ரசிகர்கள் சிலர் சிரமத்துக்கு உள்ளாகினர்.
38,000 இருக்கைகள் கொண்ட சேப்பாக்கம் மைதானத்துக்கான டிக்கெட் வரிசை 2 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதால் இந்த முறை போட்டியை நேரில் காண முடியாது என சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி, பல்வேறு சட்டத்துக்கு புறம்பான தளங்களில் டிக்கெட்டுகள் விற்கப்படுவதாகவும், அதிகவிலைக்கு கள்ளச் சந்தையிலும் டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக ரசிகர் குற்றம் சாட்டியுள்ளனர்.
