தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், HCL Technologies யுடன் இணைந்து அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் முதன்முதலாக சைக்ளோதான் போட்டியை நடத்துகிறது.
தொழில்முறை சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் இயற்கை எழில் கொஞ்சும் ECR இல் பங்கேற்று நிகழ்வை மாபெரும் வெற்றியடையச் செய்யுமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.. நமது ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க சைக்கிள் ஓட்டுவோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.




