ஓபிஎஸ் அருகில் செங்கோட்டையன்
அதிமுக உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கும் போது, இரண்டாவது இருக்கையில் அமர்ந்திருந்த ஓபிஎஸ், அமைதியாக சிரித்துக் கொண்டு அதை கவனித்துக் கொண்டிருந்தார். அதிமுகவினர் அவரை கண்டுகொள்ளாமல், தங்கள் சட்டமன்ற பணிகளை தொடர்ந்து கொண்டிருந்தனர். இருப்பினும் செங்கோட்டையன் மட்டும், ஓபிஎஸ் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தது, சமீபத்தில் அவர் மீதான விமர்சனங்களுக்கு மேலும் வலு சேர்ப்பதாக இருந்தது. அதே நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அந்த நேரத்தில் சட்டமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் எடப்பாடி பழனிசாமி அரங்கிற்கு வந்து, சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றார். அவரும் ஓபிஎஸ்.,யை கண்டுகொள்ளவில்லை.
