Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Air Quality Index: சுத்தமான காற்றை கொண்ட நாடுகள் இவை தான்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 17, 2025
in அரசியல் செய்திகள்
0
Air Quality Index: சுத்தமான காற்றை கொண்ட நாடுகள் இவை தான்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 17, 2025 10:21 AM IST

WHO-வின் 2024 சுத்தமான காற்று வழிகாட்டுதல்களை ஏழு நாடுகள் மட்டுமே பூர்த்தி செய்துள்ளன. மிகவும் சுத்தமான காற்றைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

News18News18
News18

மாசுபாடு சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிப்பதால், தற்போது காற்றின் தரம் முதன்மையான உலகளாவிய பிரச்சனையாக மாறியுள்ளது. சமீபத்திய உலக சுகாதார அமைப்பின் (2024) காற்று தர அறிக்கையின்படி, ஏழு நாடுகள் மட்டுமே WHO-வின் வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்துள்ளதாகவும் மற்றும் உலகில் சுத்தமான காற்றைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான சட்டங்கள், பசுமை எரிசக்தி திட்டங்கள் மற்றும் நிலையான நடைமுறைகள் மூலம், இந்த நாடுகள் மாசுபாட்டை திறம்பட குறைத்துள்ளதாக தெரிகிறது.

மாசுபட்ட நாடுகளில் ஒன்றாக கருதப்படும் இந்தியா, தற்போது வரை காற்று மாசுபாட்டுடன் போராடி வருகிறது. உலகளவில் காற்று மாசுபாட்டை நிவர்த்தி செய்வது எந்த நாடுகளில் சுத்தமான காற்று உள்ளது, அவர்கள் அதை எவ்வாறு செய்தார்கள் என்பதை அறிந்து கொள்வதன் மூலம் இதை நம்மாலும் பூர்த்தி செய்ய முடியும். சுத்தமான காற்றுக்கான முன்னணி நாடுகளை ஆராய்ந்து, சமீபத்திய தரவரிசையில் இந்தியா எங்கு உள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.

WHO-வின் ஆண்டு சராசரி PM2.5 வழிகாட்டுதலான 5 µg/m3-ஐ ஏழு நாடுகள் பூர்த்தி செய்துள்ளன. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்து, உலகின் தூய்மையான காற்றை கொண்ட முதல் 7 நாடுகள் இதோ..

  • எஸ்டோனியா – 127
  • ஆஸ்திரேலியா – 128
  • நியூசிலாந்து – 129
  • ஐஸ்லாந்து – 130
  • கிரெனடா – 131
  • பார்படோஸ் – 132
  • பகாமாஸ் – 138

Also Read: “விமர்சனங்கள்தான் ஜனநாயகத்தின் ஆன்மா.. அதனை வரவேற்கிறேன்” – பிரதமர் மோடி!

மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் PM2.5 துகள்களின் சராசரி செறிவு இந்த தரவரிசையை தீர்மானிக்கப் பயன்படுகிறது. PM2.5 என்பது காற்றில் உள்ள 2.5 மைக்ரோ மீட்டர்கள் அல்லது அதற்கும் குறைவான துகள்களை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். மேலும் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மனிதர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான காற்றின் தரத்தை பராமரிக்க, காற்றில் உள்ள இந்த துகள்களின் ஆண்டு சராசரி ஒரு கன மீட்டருக்கு 5 மைக்ரோ கிராம்களை தாண்டக்கூடாது. இது WHO வழிகாட்டுதலின்படி 5 µg/m³ ஆகும்.

WHO-வின் காற்றுத் தரக் குறியீட்டில் இந்தியாவுக்கு எந்த இடம்?

IQAir-இன் 2024 உலக காற்றுத் தர அறிக்கையின்படி, சாட், காங்கோ, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானை தொடர்ந்து உலகின் ஐந்தாவது மிகவும் மாசுபட்ட நாடாக இந்தியா உள்ளது. 2023ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது தரவரிசை பட்டியலில் ஓரளவு முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இன்னும் கடுமையான காற்று மாசுபாடு தொடர்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், உலகின் மிகவும் மாசுபட்ட 9 நகரங்களில் 6 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. மேகாலயாவின் பைர்னிஹாட் தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறது. நாட்டின் காற்றின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதை இந்த முடிவுகள் வலியுறுத்துகின்றன.

First Published :

March 17, 2025 10:21 AM IST



.

Previous Post

அதிமுக தீர்மானம்: பாஜக, பாமக புறக்கணிப்பு!

Next Post

'தேதியே அறிவிக்காமல் திடீரென ஒருநாள் போராடினால் என்ன செய்யமுடியும்?’: பாஜகவினர் வீட்டுச்சிறை விவகாரத்தில் அண்ணாமலை பதில்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'தேதியே அறிவிக்காமல் திடீரென ஒருநாள் போராடினால் என்ன செய்யமுடியும்?’: பாஜகவினர் வீட்டுச்சிறை விவகாரத்தில் அண்ணாமலை பதில்

'தேதியே அறிவிக்காமல் திடீரென ஒருநாள் போராடினால் என்ன செய்யமுடியும்?’: பாஜகவினர் வீட்டுச்சிறை விவகாரத்தில் அண்ணாமலை பதில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In