Last Updated:
போதைப் பொருள் இல்லா இந்தியாவை நோக்கியே மோடி அரசு பயணிப்பதாகவும் அமித்ஷா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பாஜக அரசு இரக்கம் காட்டாது என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மணிப்பூரின் இம்பால் மற்றும் அசாமின் கவுகாதியில் 88 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பிடிப்பட்டுள்ளதாகவும், 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
போதை பொருள் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு இது ஒரு உதாரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சோதனை நடத்தி போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கும் அவர் தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.
No mercy for drug cartels.
Accelerating the Modi govt’s march to build a drug-free Bharat, a massive consignment of methamphetamine tablets worth ₹88 crore is seized, and 4 members of the international drug cartel are arrested in Imphal and Guwahati zones. The drug haul is a…
— Amit Shah (@AmitShah) March 16, 2025
மேலும், போதைப் பொருள் இல்லா இந்தியாவை நோக்கியே மோடி அரசு பயணிப்பதாகவும் அமித்ஷா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
போதை பொருட்களை தடுப்பதற்கான அரசின் நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
March 16, 2025 1:32 PM IST

