Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Prani Mitra Award : அனந்த் அம்பானியின் வந்தாரா தேசிய அளவில் சிறந்த ‘விலங்கு நண்பர்’ விருதை வென்றது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 16, 2025
in அரசியல் செய்திகள்
0
Prani Mitra Award : அனந்த் அம்பானியின் வந்தாரா தேசிய அளவில் சிறந்த ‘விலங்கு நண்பர்’ விருதை வென்றது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


240க்கும் மேற்பட்ட மீட்கப்பட்ட யானைகளுக்கு புகலிடமாக விளங்கும் வந்தாராவின் யானைகள் பராமரிப்பு மையம், இந்த விருதுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சர்க்கஸ்களில் இருந்து 30 யானைகள், மரம் வெட்டும் தொழிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் சவாரி, தெரு பிச்சை எடுப்பது போன்ற கொடுமைகளில் இருந்து மீட்கப்பட்ட யானைகள் என பலவும் இங்கு பராமரிக்கப்படுகின்றன. 998 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வனதாரா, யானைகள் சுதந்திரமாக சுற்றித் திரியவும், ஒன்றுடன் ஒன்று பழகிக் கொள்ளவும், உணவு தேடுதல் மற்றும் குளித்தல் போன்ற இயல்பான செயல்களில் ஈடுபடவும் வகை செய்கிறது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளும், அன்பான பராமரிப்பும் இங்கு யானைகளுக்கு வழங்கப்படுகிறது.

புது தில்லியில் நடைபெற்ற ஒரு விழாவில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் இந்த விருதை வழங்கினார்.

விருதைப் பெற்றுக் கொண்ட வந்தாராவின் தலைமை நிர்வாக அதிகாரி விவான் கரணி, விலங்குகள் நலனுக்காக வந்தாரா எப்போதும் பாடுபடும் என்றும், விலங்குகளின் நலனை மேம்படுத்துவதும், இந்தியாவின் பல்லுயிரியலைப் பாதுகாப்பதும் தங்கள் நோக்கம் என்றும் தெரிவித்தார். “இந்த விருது, இந்தியாவின் விலங்குகளைப் பாதுகாப்பதற்காகவும், பராமரிப்பதற்காகவும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த எண்ணற்ற நபர்களுக்கு ஒரு பெருமை.

வந்தாராவில், விலங்குகளுக்கு சேவை செய்வது வெறும் கடமை அல்ல – அது நமது தர்மம்; சேவை, இரக்கம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றிய ஒரு அர்ப்பணிப்பு. வருங்கால சந்ததியினருக்கு இந்தியாவின் வளமான பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்,” என்று கரணி கூறினார்.

விலங்குகள் நலனுக்காகவும், அதற்கான முயற்சிகளுக்கு நிதியுதவி அளிப்பதற்காகவும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் செய்து வரும் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் ‘பிராணி மித்ரா’ விருது ‘கார்ப்பரேட்’ பிரிவில் வழங்கப்படுகிறது.

வந்தாராவின் யானைகள் பராமரிப்பு மையத்தில், அலோபதி, ஆயுர்வேதம் மற்றும் குத்தூசி மருத்துவம் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய உலகின் மிகப்பெரிய யானைகள் மருத்துவமனை உள்ளது. ஹைட்ரோதெரபி குளம், ஹைப்பர்பேரிக் ஆக்ஸிஜன் அறை மற்றும் சிறப்பு கால் பராமரிப்பு வசதிகளும் இங்கு உள்ளன. அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் யானைகளுக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

வந்தாரா பிரத்யேகமாக வமைக்கப்பட்ட 70 யானை ஆம்புலன்ஸ்களையும் இயக்குகிறது. மீட்கப்பட்ட யானைகளை பாதுகாப்பாகவும், மன அழுத்தமின்றியும் கொண்டு செல்ல வசதியாக ஹைட்ராலிக் லிஃப்ட், வசதியான தரை மற்றும் பல வசதிகளுடன் இந்த ஆம்புலன்ஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் மூலம், நெறிமுறை யானை பராமரிப்பு மற்றும் சிகிச்சையில் வந்தாரா புதிய தரத்தை நிர்ணயித்துள்ளது.

First Published :

February 27, 2025 2:28 PM IST



.

Previous Post

இன்றைய ராசி பலன்கள்!

Next Post

Erode Weather 16 March 2025: ஈரோடு நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.06°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Erode Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.83°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Erode Weather 16 March 2025: ஈரோடு நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.06°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In