டாஸ்மாக் டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை என்று மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், “எந்த முகாந்திரமும் இல்லாமல் டாஸ்மாக்கில் ஊழல் என குற்றம் சாட்டப்படுகிறது. அமலாக்கத்துறை சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
ரூ.1,000 கோடி ஊழல் என ஒருவர் அறிக்கை விடுகிறார். அதன்பின் அமலாக்கத் துறையும் அதையே சொல்கிறது. ஒருவர் ரூ.1000 கோடி ஊழல் எனச் சொல்கிறார். மற்றொருவர் ரூ.40,000 கோடி முறைகேடு என்று சொல்கிறார். பொய் குற்றச்சாட்டுகளை சுமத்த அமலாக்கத் துறையை மத்திய அரசு ஏவுகிறது” என்றார்.
