Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Vantara: வந்தாராவை உருவாக்கிய அனந்த் அம்பானி மற்றும் குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 13, 2025
in அரசியல் செய்திகள்
0
Vantara: வந்தாராவை உருவாக்கிய அனந்த் அம்பானி மற்றும் குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 04, 2025 5:26 PM IST

வந்தாரா விலங்குகள் மீட்பு மற்றும் பராமரிப்பு மையம், அனந்த் அம்பானியின் கனவுத் திட்டமாக குஜராத்தில் அமைந்துள்ளது. பிரதமர் மோடி பார்வையிட்டு, விலங்குகளை பாதுகாக்கும் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.

News18News18
News18

பூமியில் வாழும் சக உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளுக்கு வனவிலங்கு மறுவாழ்வு மையமான வந்தாரா சிறந்த எடுத்துக்காட்டு என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் கனவுத் திட்டமான வந்தாரா விலங்குகள் மீட்பு மற்றும் பராமரிப்பு மையம், குஜராத்தின் ஜாம்நகரில் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மையத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்து மீட்கப்பட்ட இரண்டாயிரம் வகையான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அழிந்து வரும் நிலையில் இருந்த ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட விலங்குகள் மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வந்தாரா விலங்குகள் பராமரிப்பு மையத்தில் பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். அவரை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி, அவர்களது இளைய மகன் அனந்த் அம்பானி உள்ளிட்டோர் வரவேற்றனர். வந்தாரா மையத்தில் உள்ள கல்வெட்டை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் உயிரினங்களை பார்வையிட்டார். அப்போது, ஆசிய வகை சிங்கக் குட்டிகள் மற்றும் வெள்ளை நிற சிங்க குட்டிக்கு பால் புட்டி மூலம் பிரதமர் மோடி பாலூட்டி மகிழ்ந்தார்.

Inaugurated Vantara, a unique wildlife conservation, rescue and rehabilitation initiative, which provides a safe haven for animals while promoting ecological sustainability and wildlife welfare. I commend Anant Ambani and his entire team for this very compassionate effort. pic.twitter.com/NeNjy5LnkO


— Narendra Modi (@narendramodi) March 4, 2025

இதனைத்தொடர்ந்து, பராமரிப்பு மையத்தில் புதிதாக ஈன்ற குட்டிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, அறுவை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் சிங்கம் மற்றும் சிறுத்தையை பார்வையிட்டார். தொடர்ந்து, சிம்பன்சி, ஊராங்குட்டான், நீர் யானைகள், முதலைகள், இரண்டு தலை பாம்பு, இரண்டு தலை ஆமை உள்ளிட்டவற்றை அருகில் இருந்து பார்த்து ரசித்தார். இதேபோன்று கண்ணாடி கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த சிங்கம், புலி உள்ளிட்டவற்றையும் பிரதமர் மோடி பார்த்து மகிழ்ந்தார்.

இந்நிலையில், பூமியில் வாழும் சக உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளுக்கு வனவிலங்கு மறுவாழ்வு மையமான வந்தாரா சிறந்த எடுத்துக்காட்டு என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், “ஒரு தனித்துவமான வனவிலங்கு பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் வந்தாரா என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சிக்கு அனந்த் அம்பானி மற்றும் அவரது குழுவுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்த பிரதமர் மோடி, வந்தாராவில் கிடைத்த அனுபவங்களை வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

First Published :

March 04, 2025 5:26 PM IST



.

Previous Post

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ஏவப்படவில்லை! சுனிதா பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்!

Next Post

Coimbatore Weather 13 March 2025: கோவை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 21.88°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Coimbatore Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 20.35°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Coimbatore Weather 13 March 2025: கோவை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 21.88°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In