தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையின் ஒரு பகுதியாக ஆங்கிலம் இருக்கிறது. இது உலகளாவிய வாய்ப்புகளை உறுதி செய்கிறது. மூன்றாம் மொழி திணிப்பு போலல்லாமல், உலக அளவில் சிறந்து விளங்க ஆங்கிலமும், கலாசார நெறிமுறைகளில் சிறக்க தமிழும் இருக்கிறது. நமது பெருமைக்கு தமிழும், உலக வழிகாட்டியாக ஆங்கிலமும், நமது முன்னேற்றத்திற்கும் சமத்துவத்திற்குமான வழி. இத்தகைய வலுவான இருமொழி அடித்தளத்துடன் சிறந்து விளங்கும் போது தமிழ்நாட்டுக்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், இந்தப் பதிவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கேள்விகளை அடுக்கிய அன்பில் மகேஸ், “தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கனவே சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கும்போது, ஏன் மாற்றத்தைக் கட்டாயப்படுத்த வேண்டும்? தேசிய கல்விக் கொள்கையை விடச் சிறப்பாகச் செயல்படும் ஒரு அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும்? இது வெறும் மொழியைப் பற்றியது மட்டுமல்ல, கல்வி முறையைப் பாதுகாப்பது பற்றியது. மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதில் தமிழ்நாடு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. தயவுசெய்து சிறப்பாக விளங்கும் கல்வி முறையைச் சீர்குலைக்காதீர்கள்.” என்று தெரிவித்திருக்கிறார்.
