Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஒரே ஆண்டில் 30 முறை துபாய் விசிட்.. தங்கம் கடத்திய நடிகை சிக்கியது எப்படி? – அம்பலமான திடுக் தகவல்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 12, 2025
in அரசியல் செய்திகள்
0
ஒரே ஆண்டில் 30 முறை துபாய் விசிட்.. தங்கம் கடத்திய நடிகை சிக்கியது எப்படி? – அம்பலமான திடுக் தகவல்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 07, 2025 8:06 AM IST

ஹைஃபையாக உடை அணிந்து செல்லும் ரன்யா ஆடைகளுக்கு உள்ளே தங்கக் கட்டிகளை டேப் போட்டு ஒட்டி அதன்மேல் தடிமனான உடைகளை அணிந்து கொண்டு கேஷுவலாக அதிகாரிகளை கடந்து செல்வதில் கில்லாடி எனக் கூறப்படுகிறது.

Ranya RaoRanya Rao
Ranya Rao

துபாயிலிருந்து சுமார் 15 கிலோ தங்கம் கடத்தி வந்த நடிகை ரன்யா ராவின் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 2 கிலோ தங்க நகைகள் மற்றும் இரண்டரை கோடி ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஒரே வருடத்தில் 30 முறை துபாய்க்கு சென்று வந்த நடிகைக்கு தங்கக் கடத்தல் கும்பலுடன் உள்ள தொடர்பு என்ன?

கர்நாடகா மாநிலம் சிக்மக்ளூரைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ். மொத்தம் மூன்றே படங்களில் தான் நடித்துள்ளார். 2014-ம் ஆண்டு அறிமுகமாகி 2017-ம் ஆண்டோடு தனது நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார். சினிமாவில் நல்ல வாய்ப்புகள் இருந்த போதே எங்கு போனார் எனத் தெரியாத நிலையில்தான் தற்போது தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருக்கிறார். இவரது வளர்ப்புத் தந்தை ஏடிஜிபி ராமச்சந்திர ராவின் பெயரைப் பயன்படுத்தி பலமுறை தப்பி வந்தவர் தற்போது வசமாக சிக்கியிருக்கிறார்.

கடந்த 3-ஆம் தேதி துபாயில் இருந்து பெங்களூர் வந்த விமானத்தில் வந்த இவர் 14.8 கிலோ தங்கக் கட்டிகளை தனது உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளார். துபாய்க்கு அடிக்கடி சென்று வந்த காரணத்தாலேயே அவர் சுங்கத்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். சந்தேகத்தின் பேரில் கட்டாயப்படுத்தி சோதனை நடத்திய போது தான் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார். அவர் தற்போது கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பெங்களூரில் லாவெல்லி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவரது வீட்டில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் 2.06 கோடி ரூபாய் தங்க நகைகள், ரூ.2.67 கோடி ரொக்கம் உள்ளிட்டவை சிக்கின. இதுகுறித்து ரன்யாவிடம் விசாரித்த போது பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன. நடிகைக்கு அண்மையில் தான் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றுள்ளது. கட்டட வடிவமைப்பாளரான இவரது கணவரை தற்போது பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது.

தங்கக் கடத்தலில் ரன்யாவுக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும், அவர் கமிஷன் அடிப்படையில் கடத்தல் குருவியாக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. ஒரு கிலோ தங்கம் கடத்தினால் கமிஷனாக 5 லட்சம் ரூபாய் வரை ரன்யா பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. பெங்களூருவில் இருந்து துபாய்க்கு செல்லவும் அங்கு ஸ்டார் ஹோட்டலில் தங்கவும் அவருக்கு கடத்தல் கும்பலே அறை முன்பதிவு செய்து கொடுத்துள்ளது. துபாயிலிருந்து எப்போது பெங்களூரு செல்ல வேண்டும், தங்கம் எங்கு கைமாற்றப்படும் என்பது போன்ற தகவல்கள் எல்லாம், அந்தந்த நேரத்தில் அவருக்கு கூறப்படும்.

ஹைஃபையாக உடை அணிந்து செல்லும் ரன்யா ஆடைகளுக்கு உள்ளே தங்கக் கட்டிகளை டேப் போட்டு ஒட்டி அதன்மேல் தடிமனான உடைகளை அணிந்து கொண்டு கேஷுவலாக அதிகாரிகளை கடந்து செல்வதில் கில்லாடி எனக் கூறப்படுகிறது. அவரது ஆடை அலங்காரங்களும், நடை, உடை பாவனைகளும் அவருக்கு ஒரு விஐபி தோற்றத்தைக் கொடுக்க, அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். அப்படியே விசாரணை என்றும் கூட்டிச் சென்றாலும் ”எனது தந்தை ஒரு ஐபிஎஸ் அதிகாரி, அவரை உங்களுக்குத் தெரியுமா? அவரிடம் பேசுகிறீர்களா?” என அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுத்து சுங்க அதிகாரிகளை ஆஃப் செய்துவிடுவாராம் ரன்யா.

Also Read | தக்காளி விலை கடும் வீழ்ச்சி.. ஒரு கிலோ ரூ.3 மட்டுமே.. வரத்து அதிகரிப்பால் தவிக்கும் விவசாயிகள்!

இப்படியாக துபாய்க்கும் பெங்களூருவிக்கும் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 30 முறைக்கு மேல் சென்று வந்திருக்கிறார் ரன்யா. இதுவே அவர் மீது சந்தேகத்தை அதிகரிக்க இந்த முறை தப்ப விடாமல் கையும் களவுமாக பிடித்துவிட்டனர் சுங்க அதிகாரிகள். ஒரு முறை தங்கக் கடத்தலில் சுமார் 75 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதித்து வந்துள்ளார் ரன்யா. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரன்யாவின் வளர்ப்புத் தந்தை ஏடிஜிபி ராமச்சந்திர ராவ், ”இந்த செய்தியை ஊடகத்தின் மூலமாகவே தாம் அறிந்து கொண்டதாகவும், இது தனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாகவும்” தெரிவித்துள்ளார். ரன்யா தங்களுடன் வாழவில்லை என்றும், கணவனையும் பிரிந்து வாழ்வதாகவும் குறிப்பிட்ட அவர், ”இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்றும் தெரிவித்துள்ளார். ”இந்த சம்பவம் என் கேரியரில் எந்த ஒரு கரும்புள்ளியையும் ஏற்படுத்தாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ரன்யா யாருக்காக தங்கம் கடத்தினார், அவருக்கு பின்னால் உள்ள கடத்தல் கேங்கின் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.

First Published :

March 07, 2025 7:29 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஒரே ஆண்டில் 30 முறை துபாய் விசிட்.. தங்கம் கடத்திய நடிகை சிக்கியது எப்படி? – அம்பலமான திடுக் தகவல்கள்!



.

Previous Post

இன்றைய ராசி பலன்கள்!

Next Post

Erode Weather 12 March 2025: ஈரோடு நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.06°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Erode Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.83°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Erode Weather 12 March 2025: ஈரோடு நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.06°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In