தமிழக எம்பிக்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று(மார்ச் 10) தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்றைய கூட்டத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் பேசினர். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்று கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘புதிய தேசிய கல்விக்கொள்கை பற்றிய சரியான புரிதல் தமிழ்நாட்டிற்கு இல்லை, பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர்வதாக தமிழ்நாடு கூறிய நிலையில் திடீரென நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தேசியக் கல்விக் கொள்கை திட்டத்தில் கையெழுத்திட தமிழ்நாடு முன்வந்தபோது சூப்பர் முதல்வர் அதனைத் தடுத்துவிட்டார். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு வஞ்சிக்கிறது’ என்று பேசினார்.
