பயனடையும் தென் மாவட்ட பகுதிகள்
1981 முதல் செயல்பட்டு வரும் இந்த மண்டல ஆராய்ச்சி நிலையம் விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு பகுதியிலும் பயிரிடப்படும் வறண்ட நிலப் பயிர்கள் (DRYLAND CROPS) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை ஒருங்கிணைக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள வேளாண்மைக் கல்லூரிகள் தோட்டக்கலை கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களையும் ஒருங்கிணைப்பு செய்யும் பணிகளும் கோவிலாங்குளம் மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மூலம் நடைபெறுகிறது.
