March 11, 20258:04 AM IST
Tamil Live Breaking News: 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
