சென்னை: தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12 ஆம் தேதி கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
திருவள்ளூரில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.
திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மத்திய அரசின் செயல்களை மக்களிடம் எடுத்து கூறும் விதமாக “தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் மார்ச் 12 ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.
அதேபோல், குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.
திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளவர்களின் பட்டியலை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

தங்களது தொகுதிகளில் உள்ள குறைகளை மற்றும் தேவைகளை பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து கேள்வி கேட்டு பெற்றுக் கொள்ள விரும்பாத இந்த எம்பிக்களை எண்ணிக்கையை குறைத்தால் தான் என்ன எண்ணிக்கையை குறைப்பதில் தவறு இல்லை ஆனால் வட மாநிலங்களில் இதே எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தவறு. எனவே வட மாநிலங்களிலும் எம்பிக்களின் எண்ணிக்கையை மிகவும் குறைத்து தண்ட சம்பளமாக வழங்கப்படும் மக்களின் வரிப்பணத்தை காப்பாற்ற வேண்டும்