வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படம் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
‘கங்குவா’ படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றி மாறன் ‘விடுதலை – 2’ படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.
இதனால், ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்த சூர்யா, அடுத்தாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
தற்போது, இயக்குநர் வெற்றிமாறனும் ‘விடுதலை – 2’ வெளியானதைத் தொடர்ந்து, ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளார்.
