Last Updated:
ஜெய்சங்கர் கூறியதாவது, பாகிஸ்தானிடம் இருந்து ஆக்கிரமிப்புகளை மீட்டால் காஷ்மீர் பிரச்சனைகள் தீரும்.
பாகிஸ்தானிடம் இருந்து ஆக்கிரமிப்புகளை மீட்டுவிட்டால், காஷ்மீரின் அனைத்து பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
6 நாட்கள் அரசுமுறை பயணமாக பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், லண்டனில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய ஜெய்சங்கர், காஷ்மீரின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு சிறப்பாக தீர்வு கண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
முன்னதாக பிரிட்டனில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஜெய்சங்கரை தாக்க காலிஸ்தான் அமைப்பினர் முயற்சித்ததால் பரபரப்பு நிலவியது. அந்த நேரத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் காலிஸ்தான் அமைப்பினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
March 06, 2025 4:00 PM IST

