மகாராஷ்டிரத்தில் கோல்வாக்கரின் புத்தகம் சத்ரபதி சிவாஜியை இழிவுப் படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரளிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியத் தலைவரான எம்.எஸ்.கோல்வாக்கரின் ‘பஞ்ச் ஆஃப் தாட்ஸ்’ புத்தகத்தில் மகாராஜா சத்ரபதி சிவாஜியை அவர் இழிவுப்படுத்தியுள்ளதாகக் கூறி சமூக ஊடகக் கணக்குகளில் செய்திகள் பகிரப்பட்டனர். இது முற்றிலும் தவறான தகவல் எனக் கூறி இரண்டு சமூக ஊடகக் கணக்குகளின் மீது சன்வேதா பரிவார் சன்ஸதா அமைப்பின் செயலாளர் சாகர் கொட்வாலிவாலே நாக்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விரைவில் நாக்பூர் காவல் துறை ஆணையரை சந்தித்து அந்த இரண்டு முகப்புத்தக சமூக ஊடகக் கணக்குகளை நிர்வாகிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை: பாஜக அறிவிப்பு!