செந்தில் பாலாஜி நண்பர்கள் வீட்டில் சோதனை
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் அயத்தீர்வைகள் துறையை கவனித்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்கள் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர், கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி, சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி ஆகியோரது இல்லங்களில் கேரளாவில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த மூன்று நபர்களின் வீட்டிலும் கடந்த 2023ஆம் ஆண்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
