Last Updated:
டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த நிலையில், ரயில்வே அமைச்சகம் 3 உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது.
கும்பமேளா காரணமாக டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த நிலையில், கோட்ட மேலாளர் உட்பட 3 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 15 ஆம் தேதி கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்தனர்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த, ரயில் நிற்கும் நடைமேடையை மாற்றியதால் நெரிசல் ஏற்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், அது வதந்தி என்றும், கூட்ட நெரிசலுக்கு சதி செயல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இதையும் படியுங்கள் : “யாரிடமும் பாஜக மறைமுகமாக பேசவில்லை” – எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு அண்ணாமலை பதில்
இது தொடர்பாக, ரயில்வே அமைச்சகம் அமைத்த 2 பேர் கொண்ட உயர்மட்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், டெல்லி ரயில்வே கோட்ட மேலாளர் சுக்விந்தர் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று, டெல்லி ரயில் நிலைய இயக்குநர் மகேஷ் யாதவ், டெல்லி ரயில்வே கோட்ட வர்த்தகப் பிரிவு மேலாளர் ஆனந்த் மோகனையும் பணியிட மாற்றம் செய்து ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
March 05, 2025 7:16 PM IST

