Last Updated:
வந்தாரா பார்வையிட்டது குறித்து தனது எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களிலும் அனுபவத்தை பகிர்ந்துள்ள மோடி, ஆனந்த் அம்பானியின் இந்த சேவையை பாராட்டியுள்ளார்.
வந்தாரா விலங்குகள் மீட்பு மறுவாழ்வு மையத்தை பார்வையிட்ட மோடியின் கவனத்தை அங்கு பிரமாண்டமாக செயல்படும் பராமரிப்பு மையம் ஈர்த்துள்ளது.
இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் அவர், பெண் சிங்கம் ஒன்று வாகனத்தில் மோதி முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது. வந்தாராவில் அந்த சிங்கத்திற்கு சரியான பராமரிப்பு கிடைத்தது. அவரது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட சிறுத்தைக்குட்டி சரியான ஊட்டச்சத்துடன், புதிய வாழ்வைப் பெற்றது. இதுபோன்ற பல விலங்குகளுக்கு அளிக்கப்பட்ட பராமரிப்புக்காக வந்தாராவில் உள்ள குழுவை நான் பாராட்டுகிறேன். என்று கூறியுள்ளார்.
குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு ஜாம் நகரில் செயல்பட்டு வரும் ஆனந்த் அம்பானியின் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை கடந்த ஞாயிறு அன்று பார்வையிட்டார்.
வன நட்சத்திரம் என்று அர்த்தம் கொண்ட வந்தாரா என்ற இந்த விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து தொடங்கியுள்ளது. இதனை ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி நிர்வகித்து வருகிறார்.
குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இந்த வந்தாரா பரந்து விரிந்து காணப்படுகிறது. இதற்குள் வன விலங்குகளுக்கான மருத்துவமனைகள், உடல் நல மையம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
வந்தாராவின் சேவைகளை அங்கீகரித்துள்ள மத்திய அரசு அதற்கு பிராணி மித்ரா என்ற உயரிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது. வந்தாரா விலங்குகள் மீட்பு மறுவாழ்வு மையத்தில் 1 லட்சம் சதுர அடி அளவில் மருத்துவமனையும், ஆய்வு மையமும் உள்ளன. இங்கு ஐசியு, MRI, CT Scan, X-Ray, அல்ட்ரா சண்ட், எண்டோஸ்கோப்பி, டென்டல் ஸ்கேலர் உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. இவை குறித்தும் பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு அறிந்து கொண்டார்.
வந்தாரா பார்வையிட்டது குறித்து தனது எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களிலும் அனுபவத்தை பகிர்ந்துள்ள மோடி, ஆனந்த் அம்பானியின் இந்த சேவையை பாராட்டியுள்ளார்.
March 04, 2025 7:44 PM IST
Vantara : சிங்கக் குட்டிக்கு மறுவாழ்வு கொடுத்த வந்தாரா… பிரதமர் மோடியை ஈர்த்த விலங்குகள் பராமரிப்பு மையம்

