இதையொட்டி பலரும் இளையராஜாவிற்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். கடந்த மார்ச் 3ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவை அவரது கோடம்பாக்கம் ஸ்டுடியோவில் சந்தித்து, “தமிழக அரசு சார்பாகவும், என் சார்பாகவும், முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி சார்பாகவும் வாழ்த்துகள். தலைவர் கலைஞர் வைத்த “இசைஞானி’ பட்டம்தான் உங்களுக்கு என்றும் நிலைத்து நிற்கிறது. இசைஞானியாக எல்லோருடைய இல்லங்களிலும் உள்ளங்களிலும் நீங்கள் குடியிருக்கிறீகள். எஸ்.பி.பி அதிகமாக உங்க இசையில்தான் பாடியிருக்கிறார். உங்கள் பாடல்தான் காரில் எப்போதும் கேட்பேன். ஜுன் 3ம் தேதி கலைஞர் பிறந்த நாள். அன்றைக்குத்தான் உங்களுக்கும் பிறந்தநாள். ஆனால், கலைஞர் மேல் இருக்கும் அன்பினால், உங்க பிறந்தநாளையே மாற்றிவிட்டீர்கள்” எனப் பேசியிருந்தார்.
நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சித் தலைவருமான கமல்ஹாசனும் இசையமைப்பாளர் இளையராஜாவைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவ்வகையில் தற்போது ‘விடுதலை சிறுத்தைகள்’ கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இளையராஜாவை அவரது கோடம்பாக்கம் ஸ்டுடியோவில் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
