Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`திமுக கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது..!' – திருமாவளவன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 3, 2025
in அரசியல் செய்திகள்
0
`திமுக கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது..!' – திருமாவளவன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை, கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது. அதே நேரம், அதைக் காப்பாற்றும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆர்பாட்டத்தில்

உயர் நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நீதிமன்றம் முன்பு நடந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன், செய்தியாளர்களிடம் பேசும்போது, “உயர் நீதிமன்றத்தில் 12 நீதிபதிகளை நியமிக்க உள்ளார்கள். இதில் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் உள்ள சில சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் நீதிபதியாக இல்லை. இது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றி நீதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியைப் பின்பற்ற இந்திய சட்டத்துறை அமைச்சரை, தமிழக சட்டத்துறை அமைச்சரும் வலியுறுத்த வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். இதில் தமிழக அரசும் வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும்.

மதுரையில் மார்ச் 11-ம் தேதி மத நல்லிணக்கப் பேரணி நடத்த தென் மாவட்டத்திலுள்ள ஜனநாயக சக்திகள் அனுமதி கேட்டதற்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது. இந்த பேரணி எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல, அனைத்து மதத்தினரும் கலந்துகொள்ளக்கூடியது. எனவே மதுரை மாநகரக் காவல்துறை ஆணையர் அனுமதி வழங்க வேண்டும்.

திருமாவளவன்

திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை, கூட்டணியில் கருத்து முரண்கள் இருந்தாலும் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாகவும், கட்டுக்கோப்பாகவும் இருப்பதே எதிர்க்கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. சிலர் இல்லாததையும் பொல்லாததையும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக கூட்டணியில் இருந்துகொண்டே அனைத்து பிரச்னைகளுக்கும் விசிக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கூட்டணியில் விசிக-வுக்கு எந்த நெருக்கடியும் இல்லை, திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை, கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது. அதே நேரம் அதைக் காப்பாற்றுவதற்கான பொறுப்பும் உள்ளது, விசிக எந்த இடத்திலும் பலவீனமடையவில்லை” என்றார்.

“தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எந்த மாநிலத்திலும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது!” – திருமாவளவன்



.

Previous Post

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

Next Post

9.5 லட்சம் கோடியா?; 81.74 லட்சம் கோடியா? கடன் வாங்குவதில் யார் முதலிடம்! அண்ணாமலை-தங்கம் தென்னரசு இடையே வார்த்தை போர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
9.5 லட்சம் கோடியா?; 81.74 லட்சம் கோடியா? கடன் வாங்குவதில் யார் முதலிடம்! அண்ணாமலை-தங்கம் தென்னரசு இடையே வார்த்தை போர்

9.5 லட்சம் கோடியா?; 81.74 லட்சம் கோடியா? கடன் வாங்குவதில் யார் முதலிடம்! அண்ணாமலை-தங்கம் தென்னரசு இடையே வார்த்தை போர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In