Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“படிக்க, வேலையில் சேர உதவிய முதல்வர்… திருமணத்திற்கும் வாழ்த்தியுள்ளார்” – மணப்பெண் நெகிழ்ச்சி | Chief Minister Stalin greetings to madurai wedding function

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 3, 2025
in அரசியல் செய்திகள்
0
“படிக்க, வேலையில் சேர உதவிய முதல்வர்… திருமணத்திற்கும் வாழ்த்தியுள்ளார்” – மணப்பெண் நெகிழ்ச்சி | Chief Minister Stalin greetings to madurai wedding function
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமைச்சர் மூர்த்தி வருகை, முதலமைச்சர் வாழ்த்து என ஆச்சரியங்களுடன் நடைபெற்ற இத்திருமணம் குறித்து விசாரித்தபோது, “திருவேடகத்தைச் சேர்ந்த மனோகரன் – முருகேஸ்வரி தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் சோபனா பிளஸ் டூ முடித்தவுடன் அரசு கலைக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அளவுக்கு பொருளாதார சூழல் இல்லை. அவர்களுக்கு யாரும் உதவ முன்வராத நிலையில், தன் உயர் கல்விக் கனவை நனவாக்க தமிழக முதலமைச்சருக்கு  கடிதம் எழுதினார். அது முதலமைச்சரின் கவனத்துக்கு உடனே சென்று அவர் உத்தரவில் மதுரையிலுள்ள அரசு கல்லூரியில் சோபனாவுக்கு உடனே இடம் ஒதுக்கப்பட்டது. அவர் படித்துக்கொண்டிருந்தபோது மதுரைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோபனாவின் குடும்பத்தினரை அழைத்துப் பேசி, அவரின் படிப்புக்குத் தேவையான நூல்களை வழங்கி வாழ்த்தினார்.

மணமக்களிடம் முதலமைச்சரின் வாழ்த்து

மணமக்களிடம் முதலமைச்சரின் வாழ்த்து

கல்லூரிப் படிப்பு முடித்ததும் மதுரை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பணியில் சேர்ந்து பணிபுரிந்து வரும் சோபானாவிற்கு திருமணம் நிச்சயமானதைத் தொடர்ந்து சோபனாவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு வர வேண்டுமென்று முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்கள்.

இந்நிலையில்தான் சோபனா – வீரமணி கார்த்திக் தம்பதியினரின் திருமணத்தை நினைவில் வைத்து அமைச்சர் மூர்த்தி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியை அனுப்பி வைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மணமகள் சோபனா, “நான் கல்லூரியில் படிப்பதற்கு உதவி செய்து, வேலையில் சேரவும் வழிகாட்டிய முதலமைச்சர், இப்போது என் திருமணத்திற்கும் வாழ்த்து செய்தியை அமைச்சர் மூலம் கொடுத்து அனுப்பியது எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.



.

Previous Post

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்

Next Post

போலீஸ் மிதித்ததில் குழந்தை பலி: கிராமத்தினர் போராட்டம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
போலீஸ் மிதித்ததில் குழந்தை பலி: கிராமத்தினர் போராட்டம்!

போலீஸ் மிதித்ததில் குழந்தை பலி: கிராமத்தினர் போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In