Last Updated:
அலிகாரில் சிவராத்திரி விழாவில் அன்னதானம் சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோர் உடல் உபாதை அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் (Aligarh) சிவராத்திரி விழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு உடல் உபாதை ஏற்பட்டது.
நாடு முழுவதும் நேற்று மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிவராத்திரி இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன் அடிப்படையில் பக்தர்கள் கோயில்களிலேயே தங்கி இரவு முழுவதும் வழிபட்டனர்.
அப்படி தான் உத்திர பிரதேச மாநிலம், அலிகாரில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில், வெவ்வெறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு வயிற்று போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
🚨 अलीगढ़ ब्रेकिंग 🚨
🔹 कुट्टू के आटे के पकवान खाने से फूड पॉइजनिंगदर्जनभर से अधिक लोग अस्पताल में भर्ती। शिवरात्रि व्रत में खाया गया था पकवान। उल्टी, पेट दर्द और कमजोरी की शिकायत। देहली गेट, सासनी गेट समेत कई इलाकों के लोग बीमार। अस्पताल में इलाज जारी, स्थिति नियंत्रण में।… pic.twitter.com/EhPNNJUPb4
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) February 27, 2025
இதனையடுத்து, உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உணவில் ஏதும் கலக்கப்பட்டதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வழிபாட்டிற்கான சென்ற பக்தர்கள், நிலைகுலைந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி கிடக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
February 27, 2025 6:23 PM IST
சிவராத்திரியில் அன்னதானம் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்.. உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

