Last Updated:
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 17 வயது சிறுவனின் வயிற்றில் இருந்து கூடுதலாக இருந்த இரண்டு கால்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர். மருத்துவமனையில் இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 17 வயது சிறுவனின் வயிற்றில் இருந்து கூடுதலாக இருந்த இரண்டு கால்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர். மருத்துவமனையில் இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது.
ஒருவரது உடலில் கூடுதலாக கால்கள் இருப்பது அல்லது வேறு ஏதேனும் உடல் உறுப்புகள் இருப்பது ‘இன்கம்ப்ளீட் பாரசைட் ட்வின்’ என்று அழைக்கப்படுகிறது என்றும், மருத்துவத்தின்படி, இன்று வரை உலகளவில் இதுபோன்ற 40 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன, அதுவும் இளம் வயதிலேயே என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து அறுவை சிகிச்சை துறையின் பேராசிரியரான டாக்டர் அசுரி கிருஷ்ணா கூறியதாவது, “உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவை சேர்ந்த சிறுவன், ஜனவரி கடைசி வாரத்தில், வயிற்றில் கூடுதலாக இரண்டு கால்கள் தொங்கிக் கொண்டு எங்களிடம் வந்தான். பல மருத்துவமனைகளை கடந்துதான் இந்தச் சிறுவன் எங்களிடம் வந்தான்” என்று மருத்துவர்கள் கூறினர். “எங்களிடம் வந்தபோது, சிறுவனின் வயிற்றை துணியால் மூடியிருந்தது. இதை முதலில் பார்க்கும்போது மடியில் இன்னொரு குழந்தை இருப்பது போல் தோன்றியது. பிறகு வயிற்றில் இருந்து துணியை கழற்றி பார்த்த போது நாங்கள் திகைத்துப் போனோம். எனெனில் அந்த சிறுவனின் வயிற்றில் 2 கால்கள் இருந்தன.”
“சில சமயங்களில் இரட்டைக் கருக்கள் வயிற்றில் இருந்து பிரிந்து செல்லாமல், ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கின்றன. சில சமயங்களில் இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பது மிகவும் அரிதாகவே நடக்கும்” என்று அசுரி கிருஷ்ணா கூறினார். “அத்தகைய சூழ்நிலையில், இந்த வழக்கு மிகவும் அரிதானது.”
“இதுபோன்ற வழக்குகளில் பெரும்பாலானவை சிறு வயதிலேயே வெளிச்சத்திற்கு வரும் என்றும், ஆனால் இந்த நோயாளி 17 வயதில் வந்துள்ளார், இதற்கு முன்பு அவருக்கு எங்கும் சரியான சிகிச்சை கிடைக்கவில்லை” என்று மருத்துவர் மேலும் கூறினார். “இங்குள்ள OPD-யை அடைந்த பிறகு, அதே நாளில் அறுவை சிகிச்சை பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டார். இது கடினமான பிரச்சனை என்பதால் பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த வழக்கில் ஈடுபட வேண்டியிருந்தது.”
“பிப்ரவரி 8 ஆம் தேதி நோயாளிக்கு இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், கண்காணிப்பதற்காக 24 மணி நேரம் ஐசியுவில் வைக்கப்பட்டதாகவும்” அவர் கூறினார். “அறுவை சிகிச்சையின் நான்காவது நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிறுவனின் வயிற்றில் உள்ள இரண்டு கால்களையும், பெரிய நீர்க்கட்டிகளையும் வெற்றிகரமாகப் பிரிக்க முடிந்தது, இது மற்றொரு இரட்டையரின் முழுமையற்ற உடல் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று மருத்துவர் கூறினார். “அந்த நீர்க்கட்டியானது கல்லீரல், குடல் போன்றவற்றின் மேல்பகுதியை ஒட்டி இருந்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதுபோன்ற சிகிச்சை அளிக்கப்படுவது இதுவே முதல் முறை” என்று கூறியுள்ளார்.
மேலும், சக மாணவர்களின் கிண்டல் மற்றும் உடல்நிலை பாதிப்பு காரணமாக 8 ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அந்தக் குழந்தை ஜனவரி 28 ஆம் தேதி சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்ததாகவும் மருத்துவர் கூறினார்.
February 27, 2025 7:08 AM IST
வயிற்றில் கூடுதலாக இருந்த 2 கால்கள்.. அறுவை சிகிச்சை மூலம் புது வாழ்வு அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள்!

