Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டு இளைஞர்.. புகார் கொடுத்தபோது போலீஸ்காரரும் அத்துமீறீய கொடூரம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 27, 2025
in அரசியல் செய்திகள்
0
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டு இளைஞர்.. புகார் கொடுத்தபோது போலீஸ்காரரும் அத்துமீறீய கொடூரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 26, 2025 2:44 PM IST

பெங்களூருவில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, புகார் கொடுக்க சென்ற இடத்திலும் போலீஸ்காரர் அருணால் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவை உலுக்கியுள்ளது.

கைதானவர்கள்கைதானவர்கள்
கைதானவர்கள்

பெங்களூருவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி, புகார் கொடுக்க சென்ற இடத்திலும் போலீஸ்காரர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவை உலுக்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பொம்மனஹள்ளி பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் இளைஞர் விக்கி என்பவர் அந்த சிறுமியிடம் நட்பாக பழகியுள்ளார். பின்னர், அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். அத்துடன், அடித்து துன்புறுத்தியதால் சிறுமி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் வேறு வழியின்றி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி, தாயாரிடம் கூறி கண்ணீர் சிந்தியுள்ளார்.

இந்நிலையில், அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார், சிறுமியுடன் சென்று பொம்மனஹள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கிருந்த காவலர் அருண், நல்லவர் போன்று பேசி அந்த சிறுமிக்கு உரிய நீதி கிடைக்க உதவுவதாக கூறியுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் செல்போன் எண்ணை வாங்கி தொடர்பு கொண்டுள்ளார். பக்கத்து வீட்டு இளைஞரால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வழி செய்வதுடன், நல்ல வேலை வாங்கித் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து கான்ஸ்டபிள் பேச்சை நம்பி அவரது மாய வலையில் விழுந்த சிறுமியை, பெங்களூருவில் உள்ள ஓட்டலில் சந்திக்க வேண்டும் என்று கான்ஸ்டபிள் அருண் அழைத்துள்ளார். அதை நம்பிய அந்த சிறுமியும், கான்ஸ்டபிள் கூறிய ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது, மயக்க மருந்து கலந்த மதுபானத்தை வலுக்கட்டாயமாக சிறுமிக்கு கொடுத்துள்ளார். பின்னர், அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுமியின் அந்தரங்க வீடியோவை எடுத்து, வெளியே சொன்னால் அதை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என கான்ஸ்டபிள் அருண் மிரட்டியுள்ளார்.

இதையும் படிங்க: போக்ஸோ வழக்கு; கேரளா உயர் நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின்பேரில், இளைஞர் விக்கி மற்றும் கான்ஸ்டபிள் அருண் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி, புகார் கொடுக்க சென்ற இடத்திலும் போலீஸ்காரர் ஒருவரால் மேலும் பாலியல் சம்பவம் கர்நாடகாவையே உலுக்கியுள்ளது.

First Published :

February 26, 2025 2:44 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டு இளைஞர்.. புகார் கொடுத்தபோது போலீஸ்காரரும் அத்துமீறீய கொடூரம்!



.

Previous Post

கார்ட்டூன்: நான் ஆணையிட்டால்..!

Next Post

கபிலேஸ்வரா் கோயிலில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கபிலேஸ்வரா் கோயிலில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்

கபிலேஸ்வரா் கோயிலில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In