Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கவர் டிரைவ் எனது பலவீனம், ஆனால்… விராட் கோலி கூறியதென்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 24, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கவர் டிரைவ் எனது பலவீனம், ஆனால்… விராட் கோலி கூறியதென்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த சில ஆண்டுகளாக கவர் டிரைவ் ஷாட் தனது பலவீனமாக இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு பிடித்தமான கவர் டிரைவ் ஷாட் அடிக்க முயன்று தொடர்ச்சியாக ஒரே மாதிரியாக ஆட்டமிழந்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் விராட் கோலி இந்த ஷாட்டினை விளையாடி பலமுறை ஆட்டமிழந்தார்.

தொடர்ச்சியாக ஒரே மாதிரியான ஷாட் விளையாடி ஆட்டமிழப்பதால், விராட் கோலி மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. முன்னாள் வீரர்கள் பலரும் அவரது ஷாட் தேர்வு முறையை விமர்சித்தனர். இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் கவர் டிரைவ் ஷாட்டுகளை அருமையாக விளையாடிய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார்.

இதையும் படிக்க: உள்ளூர் போட்டிகள் குறித்த பிசிசிஐ-ன் முடிவு சரியானதா? ஷிகர் தவான் பதில்!

பலமா? பலவீனமா?

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கவர் டிரைவ் ஷாட் தனது பலவீனமாக இருக்கிறது. ஆனால், அந்த ஷாட்டுகளை விளையாடுவதன் மூலமே ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது என விராட் கோலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Virat Kohli The Cover drive

Why does the cover drive make the King feel in his zone?

We've got all bases "" ️on this special with Centurion & Milestone Man King Kohli – By @mihirlee_58

WATCH #TeamIndia | #ChampionsTrophy | @imVkohli

— BCCI (@BCCI) February 24, 2025

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளாக கவர் டிரைவ் ஷாட் எனது பலவீனமாக இருப்பது குழப்பாக இருக்கிறது. ஆனால், அந்த ஷாட்டுகள் விளையாடி நான் அதிக ரன்கள் குவித்துள்ளேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கவர் டிரைவ் ஷாட்டுகளை எனது பலம் என்பதை மீண்டும் உணர்ந்ததாக நினைக்கிறேன்.

இதையும் படிக்க: எனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்கிறேன்: ஹார்திக் பாண்டியா

முதல் இரண்டு பவுண்டரிகள் எனக்கு கவர் டிரைவ் ஷாட் மூலம் கிடைத்தது. அதனால், ரிஸ்க் எடுக்கலாம் என முடிவு செய்து அதே ஷாட்டுகளை விளையாடியதாக நினைக்கிறேன். ஏனெனில், கவர் டிரைவ் ஷாட்டுகளை விளையாடும்போது, நான் நன்றாக விளையாடுவதாக உணர்கிறேன். நான் விளையாடிய விதம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்திய அணி வெற்றி பெற்றது மிகவும் சிறப்பானது. ஆட்டத்தின் தேவைகளை உணர்ந்து விளையாடுவது பிடித்திருக்கிறது. பல ஆண்டுகளாக இந்த பங்களிப்பை அணிக்காக வழங்கி வருகிறேன் என்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.





.

Previous Post

புறக்கணிக்கும் பாஜக; உத்தவுடன் நெருங்கி வரும் ராஜ் தாக்கரே – மீண்டும் மீண்டும் நடக்கும் சந்திப்பு | Raj Thackeray is getting closer to Uddhav Thackeray due to BJP boycott

Next Post

‘ரஷ்யா உண்மையான நண்பன்’-சீன அதிபர் ஜின்பிங் அறிவிப்பு, ‘வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்’

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘ரஷ்யா உண்மையான நண்பன்’-சீன அதிபர் ஜின்பிங் அறிவிப்பு, ‘வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்’

‘ரஷ்யா உண்மையான நண்பன்’-சீன அதிபர் ஜின்பிங் அறிவிப்பு, 'வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்'

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In