கடலூர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, அவர் கடலூர் மாவட்டத்துக்கான 10 அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், “இந்த விழாவின் மூலமாக பத்து அறிவிப்புகளை நான் இங்கே அறிவிக்க விரும்புகிறேன்.
-
முதல் அறிவிப்பு – திட்டக்குடி மற்றும் விருத்தாச்சலம் பகுதிகளில் இருக்கின்ற வேளாண் பெருமக்கள் பயன் பெறும் வகையில், 130 கோடி ரூபாய் செலவில் வெலிங்டன் ஏரியில், கரைகளை பலப்படுத்துவது, வாய்க்காலை புனரமைப்பது போன்ற மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
-
இரண்டாவது அறிவிப்பு – கடலூர் மாநகராட்சியில் இருக்கின்ற மஞ்சக்குப்பம் மைதானம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும்.
-
மூன்றாவது அறிவிப்பு – நம்முடைய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் – சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் சட்டமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கையை எழுப்பினார். எங்களுக்குக்கூட சில நேரம் கோபம் வந்தது. ஆனால் அந்த கோபம் இருக்கக்கூடிய இடத்தில் தான் குணம் இருக்கும் என்று சொல்வார்கள். எனவே, அந்த உணர்வோடு நான் இங்கே மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். பண்ருட்டி தொகுதியில், நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனின் கோரிக்கையை ஏற்று, 15 கோடி ரூபாய் செலவில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.
