Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரூ.1141.23 கோடியில் செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலை: முதல்வர் திறந்து வைத்தார்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 20, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரூ.1141.23 கோடியில் செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலை: முதல்வர் திறந்து வைத்தார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1141.23 கோடி செலவில்
அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட செய்யூர்-பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட 109 கிலோ மீட்டர் நீள செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலையை முதல்வர் திறந்து வைத்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (20.2.2025) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 1141 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட செய்யூர்-பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட 109 கிலோ மீட்டர் நீள செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலையை திறந்து வைத்தார்.

 பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில்,  வணிகம், சுற்றுலா போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைத்தல் போன்ற முக்கியப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாடு அரசு,   நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது.

இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் தற்போது வரையில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 16,421 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய மற்றும் மாவட்ட இதர சாலைகள்  மேம்படுத்தப்பட்டுள்ளன. 2000-க்கும் மேற்பட்ட பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளன. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2,130 கிலோ மீட்டர் முக்கியக் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன.  5,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான ஊராட்சி ஒன்றியச் சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. 

அதன் தொடர்ச்சியாக, சென்னை – கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன், நில எடுப்பு, பிற துறை சார்ந்த குழாய்களை மாற்றியமைத்தல் மற்றும் பராமரிப்பு செலவினம் உள்பட 1141 கோடியே 23 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில்,  செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், 109 கிலோ மீட்டர் நீளத்திற்கு 10 மீட்டர் சாலையாக அகலபடுத்தப்பட்டு, சாலை பாதுகாப்பு அம்சங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட செய்யூர்-பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இத்திட்டத்தில், மருதாடு, வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய
3 ஊர்களுக்கு புறவழிச்சாலைகள், மழைநீர் வடிகால்கள், 5 உயர்மட்ட பாலங்கள், 14 சிறு பாலங்கள், 225 குறு பாலங்கள், சாலைப் பாதுகாப்பினை உறுதிசெய்ய தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் இருபுறங்களில் 47,700 மரக்கன்றுகள் நடப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது. இத்திட்டத்தில், 7 ஆண்டுகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்புப் பணியும் உள்ளடங்கும்.

இத்திட்டச் சாலையானது, கிழக்கு கடற்கரைச் சாலை, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம் – மங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கின்றது.  

இத்திட்டத்தில் மருதாடு, வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய
3 ஊர்களுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால், கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலும், பயண நேரமும் குறையும். அத்துடன் செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள 67 கிராமங்களுக்கு விவசாய விளைபொருள்களை எடுத்துச் செல்லவும், அருகிலுள்ள நகர்புறங்களில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரி, மற்றும் மருத்துவமனை ஆகியவற்றிற்கு பொதுமக்கள் எளிதாக செல்லவும் இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

“தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும்!” – மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் | “Release Rs 2,152 crore for Tamil Nadu!” – Stalin appeals to Modi

Next Post

அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா அமைச்சர்.. பாஜக எடுத்த முக்கிய முடிவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா அமைச்சர்.. பாஜக எடுத்த முக்கிய முடிவு

அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா அமைச்சர்.. பாஜக எடுத்த முக்கிய முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In