Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டெல்லி முதல்வர் யார்? ரேஸில் இருக்கும் முக்கிய நபர்கள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 19, 2025
in அரசியல் செய்திகள்
0
டெல்லி முதல்வர் யார்? ரேஸில் இருக்கும் முக்கிய நபர்கள்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


News18News18
News18

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அடுத்த முதலமைச்சராக யார் பதவியேற்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில், அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சாஹிப் சிங் வர்மாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலை சந்தித்தது பாஜக. இதில், அமோக வெற்றிபெற்றுள்ள நிலையில் புதிய முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் முன்னிலையில் இருப்பவர், புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா.

முன்னாள் முதலமைச்சர் சாஹிப் சிங் வர்மா-வின் மகனான பர்வேஷ் வர்மா, மேற்கு டெல்லி தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டவர். மிகவும் அறியப்பட்ட ஜாட் இனத் தலைவரான பர்வேஷ் வர்மா, டெல்லி பாஜகவில் மிகவும் பிரபலமானவர். அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்தியது அவருக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதையும் படியுங்கள் : “மகா கும்பமேளா அரசு நிகழ்ச்சி அல்ல.. அது ஒரு சமூகத்தின் நிகழ்ச்சி” – எதிர்க்கட்சிகள் விமர்சனத்திற்கு யோகி ஆதித்யநாத் பதில்

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றபோது, பாஜக ஆட்சிக்கு வந்தால், ஒரு மணிநேரத்தில் போராட்டக்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ரோஹிணி தொகுதியில் வெற்றிபெற்றுள்ள விஜேந்தர் குப்தாவுக்கும் முதலமைச்சராக தேர்வுசெய்யப்பட வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தத் தொகுதியை தக்கவைத்த விஜேந்தர் குப்தா, டெல்லி பாஜக தலைவராக பதவி வகித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

ரஜோரி கார்டன் தொகுதியில் வெற்றிவாகை சூடிய மனோஜ் சிங் சிர்சாவும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் உள்ளார். சிரோன்மணி அகாலிதளம் கட்சியிலிருந்த அவர், 2019-ஆம் ஆண்டில் பாஜக-வில் இணைந்தார். பஞ்சாப்பில் ஆம் ஆத்மியை வீழ்த்தும் நோக்கில், மனோஜ் சிங் சிர்சாவை முதலமைச்சராக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

டெல்லி முன்னாள் முதலமைச்சர் மதன்லால் குரானாவின் மகன் ஹரிஷ் குரானாவும் போட்டியில் உள்ளார். டெல்லி பாஜக-வில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள அவர், செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சுரி ஸ்வராஜுக்கு முதலமைச்சர் பதவிக்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. புதுடெல்லி மக்களவைத் தொகுதியில் முதல்முறையாக கடந்த ஆண்டு வெற்றிபெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், பாஜக-வின் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பங்கு வகித்தார். இதன்மூலம், முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இடம்பிடித்துள்ளார்.

First Published :

February 19, 2025 7:01 PM IST



.

Previous Post

Tirunelveli Weather 19 February 2025: திருநெல்வேலி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.38°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

வரி ஏய்ப்பு புகாரை தீர்க்க ரூ.2,900 கோடி கொடுக்கும் கூகுள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வரி ஏய்ப்பு புகாரை தீர்க்க ரூ.2,900 கோடி கொடுக்கும் கூகுள்!

வரி ஏய்ப்பு புகாரை தீர்க்க ரூ.2,900 கோடி கொடுக்கும் கூகுள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In