February 17, 20257:58 AM IST
Tamil Live Breaking News : 3ஆவது விமானத்தில் நாடு திரும்பிய இந்தியர்கள்
அமெரிக்காவில் இருந்து 3 ஆவது விமானத்தில் 112 இந்தியர்கள் நாடு திரும்பினர்.
ஏற்கனவே 104 பேருடன் முதல் விமானமும், 119 பேருடன் 2ஆவது விமானமும் வந்த நிலையில், 112 பேருடன் மூன்றாவது விமானம் நேற்று அமிர்தசரஸ் வந்தடைந்தது.
இந்த விமானத்தில் ஹரியானாவை சேர்ந்த 44 பேரும், குஜராத்தை சேர்ந்த 33 பேரும், பஞ்சாபை சேர்ந்த 31 பேரும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 2 பேரும் ஹிமாச்சல் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களை சேர்ந்த தலா ஒருவரும் வந்தடைந்தனர்.

