Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

3 குழந்தைகள் உட்பட 18 பேரை பலி கொண்ட டெல்லி ரயில் நிலைய நெரிசல் : உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 16, 2025
in அரசியல் செய்திகள்
1
3 குழந்தைகள் உட்பட 18 பேரை பலி கொண்ட டெல்லி ரயில் நிலைய நெரிசல் : உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு
15
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
News18News18

புதுடெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள புதுடெல்லி ரயில் நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜுக்கு இயக்கப்படும் பயணிகள் விரைவு ரயில், இரவு 10 மணியளவில் நடைமேடை 14-ல் புறப்பட தயாராக நின்றிருந்தது.

அந்த நேரத்தில் ஏராளமான பயணிகள் 14 ஆவது நடை மேடையில் நின்றிருந்தனர். பயணிகள் காத்திருந்த அந்த நேரத்தில் சுதந்திரா சேனானி விரைவு ரயிலும், புவனேஷ்வர் ராஜ்தானி ரயில்களும் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில் நிலையத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பின் காரணமாக ரயில் நிலையத்தில் காத்திருந்தவர்கள், பிரயாக்ராஜ் விரைவு ரயிலில் ஏற ஒரே நேரத்தில் முண்டியடித்தனர். இதனால் நடைமேடை 13 மற்றும் 14-ஆம் நடைமேடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ரயில்வே ஊழியர்கள் திணறிய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கினர். நெரிசலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் ரயில்வே காவலர்கள் நடைமேடையில் இருந்த பயணிகளை வெளியேற்றினர்.

அதன் பின்னர், அடுத்தடுத்த 4 சிறப்பு ரயில்களை இயக்கியதால் கூட்டமும் மெல்ல கலைந்தது. எனினும் 20 நிமிட இடைவெளியில் நடந்த அந்த சம்பவம் பெரும் துயரமாக மாறியது. காயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Distressed by the stampede at New Delhi Railway Station. My thoughts are with all those who have lost their loved ones. I pray that the injured have a speedy recovery. The authorities are assisting all those who have been affected by this stampede.

— Narendra Modi (@narendramodi) February 15, 2025

மீட்புப் பணிகளுக்காக தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இதனிடையே, புதுடெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல் குறித்து இரு நபர்கள் கொண்ட உயர்மட்ட விசாரணைக்கு ஆணையிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

.
Previous Post

பொதுமக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! சிறுவன் பலி!

Next Post

விகடன் இணையதளம் முடக்கம்: கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே..! – விஜய்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விகடன் இணையதளம் முடக்கம்: கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே..! – விஜய்..!

விகடன் இணையதளம் முடக்கம்: கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே..! - விஜய்..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    விசாரணை குழு அமைப்பதால் இறந்தவர்கள் எவரும் உயிருடன் வரப்போவதில்லை எனவே முதலில் இவ்வளவு கூட்டம் அதை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து அதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்காத ஸ்டேஷன் மாஸ்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இரண்டாவது இறந்த நபர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் பத்து லட்சம் நஷ்ட ஈடாக வழங்கி அந்தக் குடும்பத்தினரை ஆறுதல் படுத்த வேண்டும் மீண்டும் பதிவு செய்கிறேன் அந்த ஸ்டேஷன் மாஸ்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In