கும்பமேளாவில் பங்கேற்ற மக்கள் பலர், தில்லி ரயில் நிலைய நடைமேடை 14-ல் காத்திருந்தனர். ஸ்வதந்திர சேனானி ரயில் மற்றும் புவனேசுவரம் ராஜ்தானி விரைவு ரயில்கள் தாமதமானதால் அதில் செல்வதற்காக காத்திருந்த பயணிகளும் நடைமேடை 12, 13, 14-ல் திரண்டனர்.
இதனால் நடைமேடை 14 மற்றும் நடைமேடை 16-க்கு அருகில் உள்ள நகரும் படிக்கட்டுகளுக்கு அருகில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
ரயில் நிலையத்துக்கு தில்லி காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அனுப்பப்பட்டு, கூடுதலாக 4 சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து ரயில் நிலையத்தில் நெரிசல் சுட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதில் பலர் சிக்கிப் படுகாயம் அடைந்தனர். இதுவரை இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.

ரூபாய் பத்து லட்சம் நஷ்ட ஈடு கேட்கிறீர்களா அல்லது நஷ்ட ஈடு 10 லட்சம் அரசாங்கம் தருகிறதா. நஷ்ட ஈடு தருவதற்கு அரசாங்கம் முன் வந்தால் ஆறுதலான விஷயம்