Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திக் திக் நிமிடங்கள்… திருமண மண்டபத்தை அலறவிட்ட சிறுத்தை – அதிர்ச்சி சிசிடிவி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 16, 2025
in அரசியல் செய்திகள்
0
திக் திக் நிமிடங்கள்… திருமண மண்டபத்தை அலறவிட்ட சிறுத்தை – அதிர்ச்சி சிசிடிவி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 14, 2025 11:42 AM IST

லக்னோவில் திருமண மண்டபத்திற்குள் நுழைந்த சிறுத்தை 200 பேரை அச்சுறுத்தியது.

News18News18
News18

லக்னோவில் திருமண மண்டபத்திற்குள் நுழைந்த சிறுத்தை 200 பேரை சிறைப்பிடித்து அச்சுறுத்திய சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது. அலற விட்ட சிறுத்தையின் சீறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் புத்தேஷ்வர் சாலையில் எம்.எம்.லவ்ன் திருமண மண்டபம் உள்ளது. புதன் கிழமை இங்கு இரவு திருமணம் நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுக் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர். மண்டபம் முழுக்க கலர் விளக்குகளால் அலங்கரிக்க, மேளதாளம் முழங்க ஹாலின் முதல் தளத்தில் தம்பதியின் வரவேற்புக்கும், ஹாலின் தரைதளத்தில் தட புடலாக விருந்தும் நடந்து கொண்டிருந்தது.

அப்போதுதான் யாரும் எதிர்பார்க்கா நேரம் ஒரு மிரட்டலான சம்பவம் அரங்கேறியது. சிறுத்தை ஒன்று திருமணம் ஹாலுக்குள் புகுந்து வேட்டை வாடையுடன் சீறிப்பாய்ந்து. அதை பார்த்த விருந்தினர்கள், கேட்டரிங் ஊழியர்கள் உள்ளிட்டோர் நாலா புறமும் சிதறியடித்து ஓடினர். முதல் மாடியில் இருந்தவர்கள் சிறுத்தையிடமிருந்து தப்பிக்க மேலிருந்து கீழே குதித்தனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் பலர் அங்கிருந்த அறைகளில் பதுங்கி கதவை பூட்டி கொண்டனர். மணமகனும், மணமகளும் ஒரு காரில் பதுங்கி சிறுத்தையிடம் சிக்காமல் உயிரை காப்பாற்றிக் கொண்டனர்.

மனித வாடை வாங்கிய சிறுத்தை நீண்ட நேரமாக அங்கேயே வட்டமடித்துக் கொண்டிருக்க நிலைமையை எப்படிச் சமாளிப்பது என தெரியாமல் அங்கிருந்தவர்கள் உறைந்து போனார்கள். சிக்கினால் யாரையாவது வேட்டையாடி விடலாம் என்ற பார்வையோடு சிறுத்தை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டே இருக்க வனத்துறையினர் அங்கு வந்தனர். ட்ரோன் உதவியுடன் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்தவர்கள் மேலே சிக்கி கொண்டவர்களை மீட்க களத்தில் இறங்கினர்.

திருமண ஹாலின் மேல் தளத்தில் நீண்ட நேரமாக உலவிய சிறுத்தையைப் பிடிக்க ஒரு குழு படிக்கட்டுகள் வழியாக மேலே ஏறியது. வனத்துறை குழுவினர் சிறுத்தையை நெருங்க படிக்கட்டுகளில் கவனமாக ஏறியபோது, ஆபத்தை உணர்ந்த அச்சிறுத்தை திடீரென்று பாய்ந்து காவலர் ஒருவரின் துப்பாக்கியை வாயால் பிடித்து இழுக்க ஆரம்பித்தது. துப்பாக்கியால் சுட்டு எதிர் தாக்குதல் நடத்தி அலறிய சிறுத்தையை 4 மணி நேர போராட்டத்திற்குப் பின் அதிகாலை 2 மணிக்கு பிடித்தனர்.

இப்பெரும் போராட்டத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.. சிறுத்தை நுழைந்ததால் மணவீட்டார் யாரும் இரவு முழுக்க உறங்கவில்லை. தற்போது வரை பதற்றம் நீடித்து கொண்டே இருக்கிறது. இது சம்மந்தமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Location :

Lucknow,Lucknow,Uttar Pradesh

First Published :

February 14, 2025 11:42 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

திக் திக் சிசிடிவி காட்சிகள்… மனித வேட்டைக்கு துடிதுடித்த சிறுத்தை.. திருமண விழாவில் 200 பேரை அலற விட்ட சம்பவம்!



.

Previous Post

`Vikatan Stands Strong for Freedom of Expression!’ #VikatanForFreedomOfExpression | Statement from vikatan regarding website block and Freedom Of Expression

Next Post

உரிமையைத்தான் கேட்கிறோம்; உங்கள் தனிச்சொத்தை அல்ல: மு.க. ஸ்டாலின்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உரிமையைத்தான் கேட்கிறோம்; உங்கள் தனிச்சொத்தை அல்ல: மு.க. ஸ்டாலின்

உரிமையைத்தான் கேட்கிறோம்; உங்கள் தனிச்சொத்தை அல்ல: மு.க. ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In