இது குறித்து ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் கூறியதாவது:
நாங்கள் இந்தத் தொடர் முழுவதும் சில சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கினோம். அது ஃபீல்டிங்கில் சில கோணத்தை சிறப்பாக ஏற்படுத்துவதாகட்டும் பின்புறம் ஓடுவது, கேட்ச் பிடிப்பது என போட்டிகளில் முக்கியமான நேரங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். என்னைப் பொருத்தவரை அனைவருமே சிறப்பாக செயல்பட்டார்கள்.
ஒரு அணியாக ஃபீல்டிங்கில் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. இந்தத் தொடர் முழுவதும் அமைதியாக தொடர்ச்சியாக நன்றாக விளையாடியது நம்பமுடியாத அளவுக்கு திருப்தியாக இருக்கிறது.
2ஆவது போட்டியில் பின்புறமாக ஓடிச்சென்று ஷுப்மன் கில் பிடித்த கேட்ச் முக்கியமானதாகும்.
எல்லைக் கோட்டில் பவுண்டரிகளை சேமித்தது, முக்கியமான ரன் – அவுட்டுகள் என அனைத்துமே முக்கியமானது என்றார்.
