Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Arvind Kejriwal | பஞ்சாப் முதல்வராகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 12, 2025
in அரசியல் செய்திகள்
0
Arvind Kejriwal | பஞ்சாப் முதல்வராகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 11, 2025 8:38 AM IST

Arvind Kejriwal | அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வராக பதவியேற்பார் என்ற தகவல் பரவியுள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இதை குற்றம் சாட்டியுள்ளன. பஞ்சாப் அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Arvind KejriwalArvind Kejriwal
Arvind Kejriwal

மீண்டும் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பார் என்று அரசியல் வட்டாரத்தில் தகவல் உலா வருகின்றன. இதன் பின்னணி என்னவென்பதைக் காண்போம்.

நாட்டின் தலைநகரான டெல்லியில் அதிகாரத்தை இழந்த பிறகு, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இப்போது பஞ்சாப்பில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், டெல்லியில் ஆட்சியை இழந்த பிறகு, பஞ்சாப் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கத் திட்டமிட்டுள்ளதாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

பஞ்சாப் முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ஏற்றுக்கொள்வாரா? பகவந்த் மான் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்படப் போகிறாரா? என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் வேகமாகப் பரவி வரும் கேள்விகள். இப்படி கேள்விகள் எழக் காரணம், டெல்லியில் பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் கெஜ்ரிவால் சந்திக்கவிருக்கும் கூட்டமே. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை, பஞ்சாப் எம்எல்ஏக்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

பஞ்சாப்பில் 30 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் நீண்ட நாட்களாகத் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா கூறி சர்ச்சையைக் கிளப்பினார். இந்நிலையில், முதலமைச்சர் பகவந்த் மானுக்கு எதிராக ஒன்றுகூடிய எம்எல்ஏக்கள் உள்ளிட்ட உள்கட்சி விவகாரங்கள் குறித்து அனைத்து எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் முதல் முறையாக ஆம் ஆத்மி தேர்தலில் தோல்வி அடைந்து எதிர்க்கட்சியான நிலையில், கெஜ்ரிவால் பஞ்சாப் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் பாஜக எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறியிருக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில், “பகவந்த் மானை தகுதியற்றவர் என்று கூறி முதல்வர் பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கிறார்கள். பஞ்சாபில் பெண்களுக்கு ரூ.1,000 வழங்குவதாக அளித்த வாக்குறுதியை கெஜ்ரிவால் நிறைவேற்றத் தவறிவிட்டார். போதைப் பழக்கத்தைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. பஞ்சாபில் நிலைமை மோசமாகிவிட்டது. இப்போது கெஜ்ரிவால் தனது பஞ்சாப் எம்எல்ஏக்கள் மூலம் தான் ஒரு நல்ல மனிதர் என்றும், அங்கு தன்னை முதல்வராக ஆக்க வேண்டும் என்றும் சொல்ல வைக்கிறார்” என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

Also Read | Chicken: சிக்கன் சாப்பிட கட்டுப்பாடு விதித்த அரசு.. திடீர் விலைக்குறைவு.. பின்னணி காரணம் இதுதான்!

இதே குற்றச்சாட்டைக் கூறியுள்ள பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பிரதாப் சிங் பஜ்வா, “டெல்லியில் தோல்வியடைந்த பிறகு, கெஜ்ரிவால் இப்போது எம்எல்ஏக்களுடன் பேசி பஞ்சாப் முதல்வராக முயற்சிக்கிறார். பஞ்சாபில் முன்கூட்டியே தேர்தல்கள் வரும் என்றும், பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் உள்கட்சி பூசல் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார். இதனால், பஞ்சாப் அரசியல் களம் திடீர் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

First Published :

February 11, 2025 8:33 AM IST



.

Previous Post

பொலிவியாவில் தொடர் கனமழை, வெள்ளம்! 24 பேர் பலி!

Next Post

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In