Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Delhi: “கெஜ்ரிவால் அதை செய்திருக்கணும்; தேர்தல் தோல்விக்கு காரணம் இதுதான்'' – பிரசாந்த் கிஷோர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 10, 2025
in அரசியல் செய்திகள்
0
Delhi: “கெஜ்ரிவால் அதை செய்திருக்கணும்; தேர்தல் தோல்விக்கு காரணம் இதுதான்'' –   பிரசாந்த் கிஷோர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் தோல்வி குறித்து பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நடைபெற்று முடிந்த டெல்லி சட்டசபைத்  தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்கிறது. ஆனால் தொடர்ந்து 10 ஆண்டுகாலமாக டெல்லியை ஆட்சி செய்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் தோல்வியைத் தழுவி ஆட்சியைப் பறிக்கொடுத்திருக்கிறது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தால் ஆம் ஆத்மி நிச்சயம் வென்று இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர், ஆம்ஆத்மி கட்சியின் தோல்விக்கான காரணங்களைக் கூறியிருக்கிறார். “மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட உடனேயே அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஜாமீனில் வெளிவந்த பிறகு அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

அதுமட்டுமின்றி கெஜ்ரிவால் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சிக்கு அதீதமாக முன்னுரிமை கொடுத்துவிட்டார். அதேபோல அண்மை காலமாக கெஜ்ரிவால் எடுத்து வந்த அரசியல் நிலைப்பாடும் தோல்விக்கு காரணமாகும். ‘இண்டியா’ கூட்டணியில் இணைந்து விட்டு, பிறகு டில்லி சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால், தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவால்
பிரசாந்த் கிஷோர்

தற்போதைய சூழலில் டெல்லியில் ஆம் ஆத்மி எழுச்சி பெறுவது மிகவும் கடினமான விஷயம். ஆகவே, தற்போது, ஆட்சி நிர்வாகத்தில் இல்லாத கெஜ்ரிவால், பிற மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தலாம்” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார். 

ADMK: “எடப்பாடி நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை..” -செங்கோட்டையன் ஓபன் டாக்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs



.

Previous Post

’எட்டாயிரத்தை நெருங்கும் தங்கம்!’ தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Next Post

திருப்பதி லட்டு விவகாரம்: பல்வேறு முறைகேடுகள் அம்பலம்! திண்டுக்கல் நிறுவன உரிமையாளர் கைது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பதி லட்டு விவகாரம்: பல்வேறு முறைகேடுகள் அம்பலம்! திண்டுக்கல் நிறுவன உரிமையாளர் கைது!

திருப்பதி லட்டு விவகாரம்: பல்வேறு முறைகேடுகள் அம்பலம்! திண்டுக்கல் நிறுவன உரிமையாளர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In