Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வெற்றி, தோல்வியைக் கொடுத்த ஊழல்; 12 ஆண்டுகள் கழித்து கெஜ்ரிவாலை பழிதீர்த்த ஷீலா தீட்ஷித் மகன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 10, 2025
in அரசியல் செய்திகள்
0
வெற்றி, தோல்வியைக் கொடுத்த ஊழல்; 12 ஆண்டுகள் கழித்து கெஜ்ரிவாலை பழிதீர்த்த ஷீலா தீட்ஷித் மகன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் புது டெல்லி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இத்தொகுதியில் முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஸ் வர்மா பா.ஜ.க சார்பாக போட்டியிட்டார். இதே போன்று காங்கிரஸ் சார்பாக முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் மகன் சந்தீப் தீட்ஷித் போட்டியிட்டார். இதனால் இத்தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆரம்பத்தில் கோலா மார்க்கெட் என்று அறியப்பட்ட புதுடெல்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்று இருக்கிறார். 2013ம் ஆண்டு ஊழலுக்கு எதிராக போராடிய அர்விந்த் கெஜ்ரிவால் இத்தொகுதியில் போட்டியிட்டு 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல் முறையாக வெற்றி பெற்று டெல்லியில் மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்ஷித்தை தோற்கடித்தார். இந்த வெற்றிதான் காங்கிரஸ் கட்சியை டெல்லியில் இருந்து அகற்றியது.

ஷீலா தீட்ஷித்

அதன் பிறகு நடந்த இரண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. 2020ம் ஆண்டு தேர்தலிலும் புது டெல்லி தொகுதியில் 21 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார். 2013ம் ஆண்டு காங்கிரஸ் தோல்விக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க-வின் வளர்ச்சி அதிகமாக இருந்தது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழலில் சிக்கினார். அதனை பா.ஜ.க சரியாக பயன்படுத்திக்கொண்டது. தொடர்ந்து மதுபான கொள்கை ஊழலை முன்னிலைப்படுத்தி ஆம் ஆத்மி கட்சியை பலவீனப்படுத்தியது. இது ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்ததுதான் அக்கட்சிக்கு மிகவும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க வேட்பாளர் பர்வேஸ் சர்மாவிடம் 4089 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். இங்கு காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட சந்தீப் தீட்ஷித் 4568 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளார். இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து போட்டியிட்டு இருந்தால் அர்விந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்று இருப்பார். ஆனால் கூட்டணிக்கு ஆம் ஆத்மி கட்சி வாய்ப்பு கொடுக்கவில்லை. சந்தீப் தீக்‌ஷித் இத்தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக கடுமையாக பிரசாரம் செய்தார். அவரோடு சேர்ந்து அவரின் சகோதரி லத்திகாவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். சந்தீப் தீக்‌ஷித் வெற்றி பெறாவிட்டாலும் தனது தாயை தேர்தலில் தோற்கடித்த அரவிந்த் கெஜ்ரிவாலை இப்போது தோற்கடித்த திருப்தி சந்தீப்பிற்கு கிடைத்திருக்கிறது.

12 ஆண்டுகளுக்கு பிறகு சந்தீப்பால் அதனை சாதிக்க முடிந்திருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக போராடி வெற்றி பெற்று அந்த ஊழல் மூலமே தோல்வியையும் சந்தித்து இருக்கிறார். டெல்லி தேர்தலில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவி 24 பேர் போட்டியிட்டனர். அதில் வெறும் 9 பேர் மட்டும் வெற்றி பெற்றனர். மற்ற அனைவரும் தோல்வியை தழுவினர். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அதிகமானோர் பா.ஜ.க-வில் சேர்ந்து போட்டியிட்டனர். அதேசமயம் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பா.ஜ.க-வில் சேர்ந்த பலர் தோல்வியை சந்தித்துள்ளனர். இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாவிட்டாலும், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த தேர்தலில் 4 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்ற காங்கிரஸ் இப்போது 6 சதவீத வாக்குகள் பெற்று இருக்கிறது.

டெல்லி தேர்தல்: ஆட்சியைப் பிடித்த பாஜக; பிடியை இழந்த ஆம் ஆத்மி; உங்கள் கருத்தென்ன?- #கருத்துக்களம்



.

Previous Post

Delhi election 2025 | டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 60.39 விழுக்காடு வாக்குகள் பதிவு!

Next Post

15-ஆவது ஏரோ இந்தியா நிகழ்ச்சி: இன்று தொடக்கம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
15-ஆவது ஏரோ இந்தியா நிகழ்ச்சி: இன்று தொடக்கம்

15-ஆவது ஏரோ இந்தியா நிகழ்ச்சி: இன்று தொடக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In