Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காவல் துறையினர் விகிதத்தில் வடகிழக்கு மாநிலங்கள் முன்னணியில் இருப்பது ஏன்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 9, 2025
in அரசியல் செய்திகள்
0
காவல் துறையினர் விகிதத்தில் வடகிழக்கு மாநிலங்கள் முன்னணியில் இருப்பது ஏன்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 06, 2025 11:55 AM IST

அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் மற்றும் காவல்துறை இடையேயான விகிதாசாரம் குறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமான எழுப்பட்ட கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

மக்கள் : போலீசார் விகிதம்மக்கள் : போலீசார் விகிதம்
மக்கள் : போலீசார் விகிதம்

இந்தியாவில் பிற பகுதிகளை விட வடகிழக்கு மாநிலங்களில் காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மக்கள் தொகைக்கும், காவல்துறை எண்ணிக்கைக்கும் உள்ள விகிதாச்சாரம் குறித்த தகவல்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்களுக்கு 159.54 காவலர்கள் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, 2023 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இந்த விகிதம் முறையே 156.89, 148.54, 155.77 மற்றும் 154.25 ஆக இருந்தது.

மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களில், பஞ்சாபில் ஒரு லட்சம் மக்களுக்கு 241.02 காவலர்களும், இமாச்சலப் பிரதேசத்தில் 240.40 காவலர்களும், ஹரியானாவில் 199.08 காவலர்களும், உத்தராகண்டில் 183.96 காவலர்களும், ஆந்திராவில் 165.89 காவலர்களும் உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைப்படி, ஒரு லட்சம் மக்களுக்கு 222 காவலர்கள் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சமாக, பீகாரில் ஒரு லட்சம் மக்களுக்கு 81.49 காவலர்களே உள்ளனர். மேற்கு வங்காளத்தில் 101.13 காவலர்களும், ராஜஸ்தானில் 118.18 காவலர்களும், ஒடிசாவில் 120.58 காவலர்களும், மத்தியப் பிரதேசத்தில் 121.13 காவலர்களும் உள்ளனர்.

இதையும் படிங்க: விசாரணை வளையத்தில் 104 இந்தியர்கள்.. என்ன செய்யப்போகிறது மத்திய அரசு? – 7 லட்சம் பேரின் கதி என்ன?

வடகிழக்கு மாநிலங்களில் காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நாகாலாந்தில் ஒரு லட்சம் மக்களுக்கு 1,135.9 காவலர்களும், மணிப்பூரில் 941.63 காவலர்களும், சிக்கிமில் 834.40 காவலர்களும், அருணாச்சலப் பிரதேசத்தில் 766.75 காவலர்களும் உள்ளனர். கிளர்ச்சி அச்சுறுத்தல், மலைப்பாங்கான நிலப்பரப்பு, பல்வேறு இனக்குழுக்கள் இடையேயான மோதல்கள் மற்றும் சர்வதேச எல்லைப் பாதுகாப்பு ஆகியவை வடகிழக்கு மாநிலங்களில் காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கான காரணங்களாகும்.

First Published :

February 06, 2025 11:55 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

நாட்டிலேயே வடகிழக்கு மாநிலங்களில் காவல்துறையினர் விகிதம் அதிகம் இருப்பது ஏன்? பின்னணி காரணம் இதுதான்!



.

Previous Post

திருப்பத்தூர்: தார் தொழிற்சாலை அமைக்கும் விவகாரம் – எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்கள்!

Next Post

‘தமிழ்நாடு எந்த விதத்தில் தாழ்ந்துவிட்டது…?!’ – புள்ளிவிவரங்களை அடுக்கும் ஆர்.எஸ் பாரதி|RS Bharathi questions Union on no budget allocation for TN

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘தமிழ்நாடு எந்த விதத்தில் தாழ்ந்துவிட்டது…?!’ – புள்ளிவிவரங்களை அடுக்கும் ஆர்.எஸ் பாரதி|RS Bharathi questions Union on no budget allocation for TN

'தமிழ்நாடு எந்த விதத்தில் தாழ்ந்துவிட்டது...?!' - புள்ளிவிவரங்களை அடுக்கும் ஆர்.எஸ் பாரதி|RS Bharathi questions Union on no budget allocation for TN

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In