தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் இன்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை, கூட்டுறவு, உணவு, நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலராக சத்யபிரத சாகு, தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவுச் சங்க பதிவாளராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் தமிழ்நாடு மின்விசை உற்பத்தி மேலாண்மை இயக்குனராக ஆல்பி ஜான் வர்கீஸ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனராக அன்சுல் மிஸ்ரா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலராக பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
