உ.பி.யின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ‘கல்ப்வாசி’ கூடாரத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓம் பிரகாஷ் பாண்டே சேவா சன்ஸ்தான் அமைத்த கூடாரத்தில் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாகவும், தகவல் கிடைத்ததும் உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன என்று தலைமை தீயணைப்பு அதிகாரி பிரமோத் சர்மா தெரிவித்தார்.
10 நிமிடங்களில் தீ கட்டுப்படுத்தப்பட்டது, ஆனால் கூடாரம் முற்றிலும் எரிந்தது என்றார். மகா கும்பமேளாவில் மூன்று பெரிய தீ விபத்துகள் நடந்துள்ளன.
முன்னதாக பிப்ரவரி 7 ஆம் தேதி, மகாகும்பமேளாவில் நகரின் செக்டார் 18 இல் உள்ள இஸ்கான் கூடாரத்தில் ஏற்பட்ட தீ, அருகிலுள்ள ஒரு டஜன் கூடாரங்களுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், சுமார் 20 கூடாரங்கள் எரிந்து நாசமாயின.
