
இந்தியாவைச் சேர்ந்த சில பெருநிறுவனங்களைச் சேர்ந்த தலைவர்கள் சமீபத்தில் வாரத்திற்கு அதிகபட்ச வேலை நேரத்தை 70 அல்லது 90 மணிநேரமாக அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிந்தனர். இது தொடர்பாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே (Shobha Karandlaje), “வாரத்திற்கு அதிகபட்ச வேலை நேரத்தை 70 அல்லது 90 மணிநேரமாக உயர்த்துவது போன்ற எந்த திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்.
தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் வேலை நேரம் குறித்து பிரபல தொழிலதிபர்கள் தெரிவித்த கருத்தும், அவர்களின் பரிந்துரையும் சர்ச்சையான நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஷோபா கரந்த்லஜே விளக்கம் அளித்துள்ளார். தொழிலாளர் (labour) என்பது பொதுப் பட்டியலின் கீழ் உள்ள ஒரு சப்ஜெக்டாக இருப்பதால், தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவது மாநில அரசுகளாலும், மத்திய அரசாலும் அந்தந்த அதிகார வரம்புகளில் செய்யப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிக்க: கருத்துக் கணிப்புகள் எப்போதும் உண்மையானது இல்லை: ஆம் ஆத்மி நம்பிக்கை
மத்தியத் துறையைப் பொறுத்தவரை Central Industrial Relations Machinery (CIRM) ஆய்வு அதிகாரிகள் மூலமும், மாநிலங்களைப் பொறுத்தவரை அந்தந்த மாநிலங்களின் labour enforcement machineries மூலமும் தொழிலாளர் விவகாரங்கள் கையாளப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களின்படி, வேலை நேரம் மற்றும் ஓவர் டைம் உள்ளிட்ட பணி நிலைமைகள், தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் அந்தந்த மாநில அரசுகளின் Shops and Establishments விதிகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. பெருநிறுவனத் துறை உட்பட பெரும்பாலான நிறுவனங்கள் இந்த சட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.
இதனிடையே 70-90 மணி நேர வேலை வாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்று வரும் நேரத்தில், பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கை, வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கும் மேலாக வேலையில் செலவிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுவதாக மேற்கோள் காட்டியது. நாளொன்றுக்கு 12 மணிநேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்பவர்களின் மன நலன் மோசமாக இருக்கும் என்றும் கணக்கெடுப்பு குறிப்பிட்டது.
இதையும் படிக்க: கடந்த 15 ஆண்டுகளில் எத்தனை இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்? முழு விவரம் இதோ!
உலக சுகாதார அமைப்பின் ஆய்வை மேற்கோள் காட்டி, உலகளவில், மனச்சோர்வு மற்றும் பதட்டம் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 12 பில்லியன் நாட்கள் இழக்கப்படுகின்றன, இது 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் நிதி இழப்பை ஏற்படுத்துகிறது. ரூபாய் மதிப்பில், இது ஒரு நாளைக்கு சுமார் ரூ.7,000 ஆகும்” என்று அறிக்கை கூறி உள்ளது.
L & T லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எஸ்.என். சுப்ரமணியன், ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும், ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட வீட்டில் உட்காருவதை விட வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறிய நிலையில், 2024-25 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின் வேலை நேரம் குறித்த கருத்து கூறப்பட்டுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, வாரத்திற்கு 70 மணி நேர வேலை என்ற தனது கூற்றை நியாயப்படுத்தியுள்ளார். “இந்தியாவை முதலிடத்தில் கொண்டு வருவதற்கு நாம் கடினமாக உழைத்து உழைக்க வேண்டும்” என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று மூர்த்தி கூறினார்.
அதே நேரம் நீண்ட வேலை நேரம் என்பது ஒரு ஊழியரின் வெற்றிக்கு அல்ல, சோர்வடையச் செய்யும் ஒரு செய்முறை என்று ஆர்பிஜி குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்கா கூறினார். அதேபோல் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும், வேலை செய்யும் நேரத்தை விட வேலையின் தரம் மற்றும் உற்பத்தித்திறனில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
February 07, 2025 7:36 PM IST
