Last Updated:
Kanimozhi NVN Somu | சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர தாமதம் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற திமுக எம்.பி. கனிமொழி சோமு,சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் அவமதிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
“ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் அல்லது ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு பேசியுள்ளார்.
ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி சோமு தெரிவித்த நிலையில், அதற்கு மத்திய அமைச்சர் நட்டா எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திமுக எம்.பி. கனிமொழி சோமு, ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்காவிட்டால் ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் என்றார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர தாமதம் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற அவர், சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் அவமதிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஆளுநர் குறித்து பேசிய கனிமொழிக்கு மத்திய அமைச்சர் நட்டா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது எழுந்த திமுக எம்.பி திருச்சி சிவா, சட்டமன்றத்தில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் பற்றிதான் கனிமொழி சோமு கூறினார் என்றார்.
காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷும் கனிமொழிக்கு ஆதரவாக பேசினார். ஆனால் ஆளுநர் குறித்து பேச பாஜக மற்றும் அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
Delhi,Delhi,Delhi
February 04, 2025 4:14 PM IST

