தகுதி அற்றவர்களாக கருதப்பட்டவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியுடையவர்கள் பணியில் இருப்பதை அரசு உறுதி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த தேசிய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் கமலேஷ் பாஸ்வான் தெரிவித்ததாவது,
”2022 – 23 நிதியாண்டில் 86,17,887 பேரும், 2023 – 24 நிதியாண்டில் 68,86,532 பேரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த இரு நிதியாண்டுகளிலும் சேர்த்து 1,55,04,419 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
