ஓராண்டுக்கு முன் ஆட்சிக்கு வந்தேன். தாய் திருநாட்டுக்கு ” என்ற பெயர் மாற்றம் உட்பட முக்கியமான சில காரியங்களை செய்திருக்கிறேன். இதையெல்லாம் பார்த்துவிட்டு சிலருக்கு கோபமும் ஆத்திரமும் வருகிறது. ‘இவர்களை விட்டு வைக்கலாமா?’ ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ‘முடியுமா ?’ என்று நான் சவால் விட மாட்டேன். உங்களால் முடியும். ஆனால், ஆட்சியை கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து அண்ணாதுரை கொண்டு வந்ததை எல்லாம் மாற்ற வேண்டும் என்று எண்ணும்போது ‘மக்கள் வெகுந்தெடுவார்களே !’ என்ற அச்சமும் கூடவே எழும் இல்லையா ? அந்த அச்சம் இருக்கிறவரையில், இங்கே யார் ஆண்டாலும், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள் ! ~ இவை முதலமைச்சராக இருந்தபோது பேரறிஞர் அண்ணா கூறிய வார்த்தைகள்..
