இந்த நிலையில், மில்லியன் டாலர்கள் வேண்டுமா? இந்த பண்டைய ‘எழுத்துருக்களை கண்டறிய முனைக! என்ற தலைப்பில் ஆங்கில நாளிதழ் “தி நியூயார்க் டைம்ஸ்” நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில், வெண்கல யுக நாகரிகத்தை பற்றிய ஆய்வுகளை வெளியிட்டு நீண்ட கால பண்பாட்டுப் போர் ஒன்றை அவர் முடிவுக்கு கொண்டு வர தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்திருக்கிறார்.
இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அறிஞர்களை குழப்பத்தில் ஆழ்த்திய ஒரு புதிர். இப்போது அதற்கு ஒரு அழகான பணப் பரிசு உள்ளது: புராதன சிந்துவெளி நாகரிகத்தின் எழுத்துருக்களை கண்டறியும் எவருக்கும் மில்லியன் பரிசு என நீண்ட கட்டுரை வெளியிட்டுள்ளது.
ரூ.8.57 கோடி பரிசை வழங்கிடத் தமிழ்நாடு காத்திருக்கிறது
இந்த நிலையில், “சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துக்கொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 8.57 கோடி) பரிசாக வழங்கப்படும்” – என்ற தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு குறித்து அமெரிக்காவின் “தி நியூயார்க் டைம்ஸ்” நாளிதழ் பாராட்டி வெளியிட்டுள்ள கட்டுரை தொடர்பாக – முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், சிந்துவெளி நாகரிக எழுத்துமுறையைப் புரிந்துகொள்ள வழிவகை செய்யும் திறமையாளர்க்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலரைப் பரிசாக வழங்கிடத் தமிழ்நாடு காத்திருக்கிறது என கூறியுள்ளார்.
